பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாடுபோல் திரிந்து சகதிக் குணங்களில் புரண்டு. சகலரும் வெறுக்கின்ற கூவம் போல ஆகின்ற மக்களும் உண்டு. தம்மால் பிறருக்கு உதவியில்லாவிட்டாலும், பிறரை மதித்து மகிழ்விக்கின்ற பொதுமக்கள் போல, கடல் நீர் உதவுகிறது. இப்படியெல்லாம் பேசினார் தாத்தா! நமது உடலையும் பார். உழைத்து வியர்வையாக வரும் நீர் உப்பு நீர், வாயில் ஊறும் உமிழ்நீரோ சுவை நீர். புண்ணிலிருந்தும் கட்டியிலிருந்தும் வழியும் நீரோ நாற்றநீர் நமது உடம்பையும் முந்நீர் உலாவும் புதிய உலகம் என்றும் கூறலாம் அல்லவா!' சிறுவனுக்கும் புரிந்ததோ என்னவோ. தலையை ஆட்டினான். தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெரியவர் பேரானந்தம் அடைந்தார். பயன்படாதது நீயாகவும், பயன்படுவது நீராகவும், அதிகப் பயன்படுவது நீர்கள், என்பதுதான் நீங்கள் என்று ஆயிற்றோ என்றார் அவர் நீர் என்பது மரியாதைக் குரியது. நீங்கள் என்பது அதிக மரியாதை அல்லவோ! நம்மை பிறர் நீங்கள் என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினால் நாமும் மற்றவர்க்கு மேலாக இருக்க வேண்டும். அப்படித்தானே! அதுவே நமது இலட்சியம்!