பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • உனது பணி அனைத்தையும் சரிபார்த்துப் பொருளாதாரத்தை நிறுவுவதில், உனது சொற்கள் சொற்களாக மட்டுமே இல்லாமல், நடைமுறை வெற்றிகளையும் பெற்றுள்ளதாக உள்ளதா எனக் கவனி. வி.இ.இலெனின்
  • மயிர்களைப் பிளந்து கொண்டிராதே, உனது பொதுவுடைமைக் கொள்கைபற்றி ஆரவாரம் மிக்கவனாக இருக்காதே. உனது சோம்பேறித்தனம், செயலற்ற தண்மை, ஆர்வமற்ற தண்மை, பிற்போக்கு மனப்பாண்மை ஆகியவற்றை மறைக்கப் பெருஞ் சொற்களைக் கையாளாதே. வி.இ.இலெனின்
  • குறைந்த அரசியல் ஆரவாரம், மிகச் சில புருவத்தை உயர்த்தும் கலந்துரையாடல்கள், வாழ்க்கைக்கு மிக நெருக்கமாயிருத்தல், உழைப்பாளிகளும், உழவர்களும் அவர்களது அன்றாடப் பணி யில் புதிய மாற்றதை உருவாக்கும்வழியில் அதிகக் கவனம்செலுத் துதல், இந்தப் புதியவை எந்த அளவு பொதுவுடமைத் தன்மை

யைப் பெற்றிருக்கின்றன என்பதை சரிபார்த்தல்.

வி.இ.இலெனின்

மனிதனின் இன்றியமையாத குழ்நிலை

  • உழைப்பும் அறிவியலும் - உலகினில் இவ் இரு ஆற்றல்களை விட உயர்ந்தது வேறெதுமில்லை. மாக்சிம் கோர்கி
  • உலகின் வியப்புகள் அனைத்துமே, மனிதனின் விடாமுயற்சி யுடன் மேற்கொள்ளப்பட்ட செயல்களாலும், ஆர்வம் நிறைந்த உழைப்பாலும் உருவாக்கப்பட்டவை ஆகும். மாக்சிம் கோர்கி
  • மனிதனின் மேண்மை உழைப்பிலே, வேறெதுவிலுமின்றி உழைப் பிலேயே அடங்கியிருக்கிறது. மாக்சிம் கோர்கி