பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • இலவய உழைப்பு என்பது உலகைத் தலைகீழாக மாற்றச்செய்யும் ஆர்க்கிமெடிஸின் சுழலும் அச்சாகும். மாக்சிம் கோர்கி
  • உழைப்பு, படைப்பு என்ற வீரச் செயல்களைவிடப் பெருமிதம்

நிறைந்த வீரச் செயல்கள் உலகில் எதுவுமில்லை.

மாக்சிம் கோர்கி

  • உழைப்பதில் விருப்பம் கொண்ட மக்களையும், நன்கு பணியாற்றி யவர்களையுமே உண்மையான வீரர்களாக எண் வாழ்நாள் முழு வதும் நாண் மதித்து வந்திருக்கிறேன். மாக்சிம் கோர்கி
  • உழைப்பு என்பதே பண்பாட்டின் அடித்தளமாகும்.

மாக்சிம் கோர்கி

  • ஒருவரது பண்பாட்டின் நிலை எப்போதுமே அவரது தளராத ஊக்கம் என்பதுடன் நேர் விகிதத்தில் அமைந்திருப்பது ஆகும். மாக்சிம் கோர்கி
  • நமது நாட்டில் உள்ள அழகு நிறைந்தவை, உழைப்பாளியால் உருவாக்கப்பட்டவை; மனிதனின் திறமையான கைகளால் உரு வாக்கப்பட்டவை; நமது சிந்தனைகள், கொள்கைகள் அனைத்துமே அவற்றின் தோற்றங்களை உழைப்பின் நடைமுறையிலிருந்து பெற்றவையே. மாக்சிம் கோர்கி
  • நமது உலகம் எண்பது சொற்களால் உருவாக்கப்பட்டதில்லை; ஆனால் செயல்களாலும், உழைப்பாலும் உருவாக்கப்பட்டதாகும். மாக்சிம் கோர்கி
  • வேலையைப் படைப்பாகக் காண நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மாக்சிம் கோர்கி
  • நீ செய்வது எதனையும் விருப்பத்துடன் செய்; பின்னர் உனது வேலை, கடினமானதும்கூட, படைப்பு என்ற நிலையை அடைந்து விரும். மாக்சிம் கோர்கி

100