பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • சோம்பலை அழிப்பது, உழைப்பை மேன்மைப்படுத்துவது . இங்கு வரலாற்றின் நிலை பெற்றுள்ள மனப்பாண்மையை நீ பெற்றி ருக்கிறாய். நிகலாய் தோப்ரோலியுபோவ்

மனிதனும், செயல்பாடும்

  • உயிர்வாழ்வதற்கு, ஏதோ ஒன்றினைச் செய்வதற்கு இயன்ற வனாக நீ இருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • வாழ்நாள் முழுவதும் ஒருவண் ஆக்கச் செயல் ஒன்றினைச் செய்து

கொண்டிருக்க வேண்டும் . வாழ்நாள் முழுவதுமே.

மாக்சிம் கோர்கி

  • உன்னை நீயே தனிமைப்படுத்திக் கொள்ளாதே - அதுதான் மிகவும் பெருமை வாய்ந்ததும், அழகு நிறைந்ததுமான உண்மை ஆகும். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாத மனிதன் நீரு வாழ்க. மாக்சிம் கோர்கி
  • நாளை தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறியாத

மனிதன் பரிவுக்குரியவன். மாக்சிம் கோர்கி

  • வேலையெண்பது ஒரு கடினமான, பிடிவாதமுள்ள விலங்காகும், திறமையாக அதனைக் கட்டுப்படுத்திக் கடிவாளத்தை இறுக்கிப் பிடி, இல்லாவிட்டால் அது உண்னையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். மாக்சிம் கோர்கி
  • ஒரு பணியை நன்றாகச் செய்யவேண்டுமானால், அது அவ்வாறு செய்யப்பட இயைந்ததாக இருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • செயலாற்றும் தந்திரத்தை நீ அறிந்திராவிடில், உனது வலிமை மிகுந்த கண்ணோட்டமே வீணானது. சோ ஆகுஸ்ட் வேலி

104