பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

பரும் தனி மனிதன், தனது பங்களிப்பாக, அவனது பணியை எளிமையானதாக்கி, படைப்பைப் பெருக்கி, ஒரு கலையின் வடிவத்தை அதற்களிக்கிறான். பணியை ஒரு படைப்பாகக் காண நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மாக்சிம் கோர்கி

  • சுருங்கக் கூறின், கலையெண்பது ஆதரவாகவோ, எதிர்த்தோ மேற் கொள்ளப்பரும் ஒரு போராட்டமாகும். அக்கறையற்ற கலை யென்று எதுவுமேயில்லை, இருக்கவும் இயலாது. ஏனெனில் மனிதர்களாகிய நாம் ஒளிப்படக் கருவி போன்றவர்களல்லோம், உண்மை ப் படம் பிடிக்க நம்மால் இயலாது. நாம் ஒன்று உண்மை நிலையை ஏற்றுக் கொள்கிறோம் அல்லது

மாற்றுகிறோம் அல்லது அதனை அழித்துவிடுகிறோம்.

மாக்சிம் கோர்கி

  • மக்களால் புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, காலங்கால மாகக் காப்பாற்றிக் கொண்டுவரப்பட்ட நாட்டுப்புறக் கலையெண் பதே மிக போற்றப்பட்ட, பேரறிவுக்கு நெருக்கமான, மிக உயர்ந்த வகையான கலையாகும். மைக்கேல் கால்னின்
  • இலக்கியமென்பது மக்களின் உள்ளுணர்வும், அதன் உள்ளுயிர்ப்பும் உலகின் மலரும், கனியுமாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • இலக்கியமென்பது உலகில் மறைக்கப்பட்டுள்ள மனிதர்களின்

சிந்தனை ஊற்றின் இறுதியான மேன்மையான வெளிப்பாடாகும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • இலக்கியமென்பது ஆற்றல் நிறைந்ததாகவும் எல்லையற்றதாக வும் முடிவற்றதாகவும் இருக்க வேண்டுமெனின், அது அனைத்து வகைகளிலும் மக்களுடையதாகவும் மக்களுக்கானதாகவும் இருக்க வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • ஒரே நேரத்தில் அனைத்துலகிற்குமானதாக இருக்கும் இலக்கியம் மட்டுமே தேசிய இலக்கியமாகும், அனைத்துலக மனிதநேயத்திற்

160