பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தனர்

அளவிற்குப் பின் கெட்டவையாகவும், ஊறு விளைவிப்பவை யாகவும் மாறக்கூரும் மாறத்தான் செய்யும். வி.இ.இலெனின்

  • உண்மையை நேரடியாக நேர்மையாகச் சந்திக்கவும், அரசியலில் அது எப்போதுமே மிகச் சிறந்ததும், சரியான ஒரே மனப்பாங்கும் ஆகும். வி.இ.இலெனின்
  • தவறான பேச்சுத் திறனும், தவறான தற்பெருமையும் ஒழுக்கச் சிதைவுக்கு வழி வகுப்பதுடன், அரசியல் அழிவுக்குத் தவறாமல் அழைத்துச் செல்வதாகவே அமையும். வி.இ.இலெனின்
  • அரசியலில் நேர்மை என்பது வலிமையின் விளைவாகும், வெளி

வேடமென்பது வலிமையின்மையின் விளைவாகும்.

வி.இ.இலெனின்

  • அரசியலை மலிவான தந்திரங்களின் ஒரு தொடர் என எவர் கருதுகிறார்களோ, ஏமாற்றுதல் என்பதன் விளிம்பிற்கு அடிக்கடிச் சென்று கொண்டிருப்பதால், நாம் மிகுந்த தீர்மானத்துடன் அவர்களைக் கண்டிக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • உழைக்கும் பிரிவு மக்களின் தலைவர்கள் தேவதைகளோ, துறவி களோ, வீரர்களோ அல்லர் எண்பதுடன், வேறு எவர் ஒருவரை யும் போன்ற மக்களே ஆவர். அவர்கள் தவறுகள் செய்யலாம்.

ஆனால் கட்சி அவர்களை உரிய பாதையில் செலுத்தும்.

வி.இ.இலெனின்

  • தனிப்பட்டவர்களை அல்லாமல் கோடிக் கணக்கானவர்களின் மனித உறவு என்னும் பகுதியில், அரசியலில் உண்மையாக இருப்பது எண்பது ஆய்வுக்குட்பட்ட சொல்லுக்கும் செயலுக்கும்

இடையேயான ஒரு தொடர்பாகவே உள்ளது ஆகும்.

வி.இ.இலெனின்

  • அரசியலுக்கு வளைந்து கொருக்கும் ஒரு மனம் வேண்டும். ஏனெனில் மாற்ற இயலாத அல்லது நிலையான விதிகளை

16