பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • ஒர் இளைஞன் தனது பெற்றோர், தோழர்கள், நண்பர்களிடம் அன்பு செலுத்தாதவனாக இருந்தால், அவன் அவனது மனைவி யிடமும் அன்பு செலுத்தாதவனாகத்தான் இருப்பான். பாலியலற்ற அவனது அன்பு எவ்வளவு அகன்றதாக உள்ளதோ, அவ்வளவு பெருந்தன்மை கொண்டதாக அவனது பாலியல் அன்பு இருக்கும். ஆண்டன் மெகரன்கோ
  • நமது குழந்தைகளிடம், நமது அண்பைப் பற்றி, பேரறிவுடன் அடிக்கடி அதிகமாகப் பேசாமல் இருக்கும் அளவுக்கு, அவர் களின் வருங்கால அன்பு அதிக அழகு நிறைந்ததாக இருக்கும்; ஆனால் நமது இந்த அரிதான அன்புவெளிப்பாடு, குழந்தைகளின் பழக்க வழக்கங்களை அடிக்கடி கண்காணிப்பது எண்பதுடன்

கைகோர்த்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

ஆண்டன் மெகரன்கோ

  • முதலில் நமது குழந்தைகளுக்குக் கற்றுத் தந்து, பின்னர் அவர்

களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். இதில் ஆர்வம் அற்று இருப் பவர்கள், காலத்தால் பின் தங்கிவிடுபவர்கள் ஆவர்.

- ஜானிஸ் ரெய்னிஸ்

  • தண் குழந்தைகளின் வாழ்க்கையை அவர்களுக்காக ஏற்பாடு செய்ய முயலும் ஒர் அண்பான தாய், பெரும்பாலும் அவளது குறுகிய கருத்துகளினால் அவளது விருப்பங்களின் குறுகிய கண்ணோட்டத்தினால், கேட்கப்படாத அவளது கவனிப்பு என்னும் உற்சாகத்தினால், அவர்களின் கைகால்களைக் கட்டிவிடுபவளாக ஆகிவிடுகிறாள். திமிட்ரி பிசரேவ்
  • வாழ்க்கையின் இன்றியமையாத நேரங்களில், தந்தைக்கும் தாய்க்கும் ஆதரவளிக்கும் ஒருவராக இருப்பது சிறந்ததாகும், ஆனால் அவர்களின் சிறுமையான, பொருளற்ற கோரிக்கை களின் மீது அதிகக் கவனம் செலுத்துவது, ஒர் இன்றியமையாத, விடுதலையான, துணிவான திறமையைக் குறைத்துவிடவே செய்யும். அலெக்சாண்டர் கிளிபோயேடோவ்

186