பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

அச்சடிக்கப்பட்டு விட்டதாலும், இவ் இருவர் மற்ற நால்வரின் பொறாமையைத் துண்டுகின்றனர். விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி

  • தகுதி நிறைந்த எழுத்துகளை, வணிகக் குப்பைகளில் இருந்து பிரித்தறிவதில் நாம் மிகுந்த திறமை படைத்தவர்கள் அல்லர். இரண்டுமே காண்பதற்கு ஒரு புத்தகம் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளன. உண்மையில், குப்பைப் புத்தகங்களே பெரும் பாலும், நல்ல புத்தகங்களைவிட, மிக அதிகப்படியான பொருட் செலவில் அச்சடிக்கப்படுகின்றன. அலெக்சாண்டர் பிளோக்
  • மிகக் குறைந்த புத்தகங்களே இருக்கட்டும், ஆனால் அவை ஒளி மிக்கவையாக இருக்கட்டும். ஒர் ஒளி மங்கிய புத்தகம், புத்தகப் பேழையில் இருப்பதற்கான எந்தத் தகுதியையும் பெற்றிருக்க வில்லை. ஒரு நேர்மையான உழைப்பாளியின் நேரம் வீணாக்கப் படக் கூடாது. நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
  • ஒரு கீழ்த்தரமான மனிதன் அனைத்துச்செல்வச்செழிப்புகளையும் நுகர்வதைக் காண்பது போலவே, மிகுந்த பொருட்செலவில் உண்டாக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான, ஆழமற்ற புத்தகத்தைக்

காண்பதும் அருவருப்யூட்டு வதாகவே உள்ளதாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஆழ்ந்த சிந்தனை கொண்டவர் வேகப்படுவதில்லை. அழகு பெரு

மிதத் தோற்றம் கொண்டதாக இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் பூஉழ்கின்

  • மனித இனம் தகுதியற்ற குப்பைப் புத்தகங்களை படிப்பதிலிருந்து

அனைத்து வகைகளிலும் காப்பாற்றப்பட வேண்டும்.

எஸ்.ஐ.வாவிலோவ்


188