பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξε த. கோவேந்தன்

  • நிலத்தினை ஒட்டுண்ணிப் புல் உண்கின்றது, துரும்பு இரும்பை உண்கின்றது; அதுபோலவே பொய்களும் உள்ளுயிரை உண் பவையாகும். ஆண்டன் செகாவ்
  • ஒரு பொய் என்பது வாழ்வில் உள்ள ஒரு வறிய துணையேயாகும். என்.கே.குருப்ஸ்கயா
  • பொய்யுரைக்கும் பழக்கம் கொண்டவன் எப்போதுமே கூர்ந்த நினைவாற்றலைப் பெற்றவனாக இருக்க வேண்டும். இல்லை யெனில் அவன் அவனது பொய்யையே மாற்றியுரைக்க நேரிடும். என்.ஐ.நோவிகோவ்

குடிப் பழக்கம்

  • எத்துனை அற்புதமான நிறுவனங்களும், எத்துணை அற்புத

மான மக்களும், தீய பழக்கங்களினால் அழிக்கப்பட்டுள்ளனர்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • நன்கு ஒரு தெரு கூட, ஒரு குடிகாரனுக்கு இருண்ட தாகவே இருக்கும். கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • மகிழ்ச்சிக்காகவே அருந்தப்பட்டாலும் மனித இனத்துக்கு மகிழ்ச்சியை விட அதிகத்துயரம் அளிப்பதாகும், மதுவினால்எவ்வளவு எண்ணிக் கையான வலிமை படைத்த திறமை படைத்த மனிதர்கள் அழிந்தும், அழிந்து கொண்டும் இருக்கின்றனர். இவான் பவலோவ்
  • மது அருந்தாமல், உனது நெஞ்த்தை புகையினால் தீங்கு செய்யா மல், நீஇருப்பாயே ஆனால், நீயும் பெரியார் (டைடியான்)போல் நீண்ட காலம் வாழ்வாய். இவான் பவலோவ்
  • தனிப்பட்ட மனிதனுக்கும், சமுகத்துக்கும், நாட்டிற்கும் மது அருந்

துவது என்பது மாபெரும் கேடுகளில் ஒன்றாகும்.

பவல் கொவலேவ்ஸ்கி

216