பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

திறமையற்ற வாழ்வின் தோல்விகளினாலுமே, தற்கொலைகள் நடைபெறுகின்றன என நான் நினைக்கிறேன். ஒருவர் தம்மைப் பற்றியே பரிவு கொள்வது என்பது ஒரு கொடிய துன்பம் தரும் ஒர் உணர்வாகும். பெண்டி கவியேவ்

  • ஒரு மனிதன் எவ்வளவு சிறந்தவனாக இருக்கிறானோ, இறப்ப தற்கு அவ்வளவு அஞ்சாதவனாகவே அவன் இருக்கிறான்.

இலியோ தோல்கதாய்

  • இறப்பு பற்றிய அச்சம் எண்பது வாழ்வின் நற்தன்மையுடன் பிரிக்க இயலாதபடி, தவிர்க்க இயலாதபடி தொடர்புடையதாகும். இலியோ தோல்கதாய்
  • வாழ்வதற்கு வெறுப்பு கொண்டிருக்க, ஒருவண் பரிவுக்கும்,

இரக்கத்திற்கும் உரிய ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

இலியோ தோல்கதாய்

  • இறப்பைக் கண்டு அஞ்சாதபடியும், அதனை விரும்பாதபடியும் நீ வாழ வேண்டும். இலியோ தோல்கதாய்
  • உறுதியாகச் சொல்வதானால், அழியாமை என்பது ஒருவரது வழித் தோண்றல்களின் மூலமாகவே அய்யமற்ற வகையில் வெளிப்படுத்தப்படுவதாகும். இலியோ தோல்கதாய்
  • தண்மையே ஏமாற்றிக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல், இறுதி வரை தனக்குத் தானே உண்மையானவனாக இருந்து, அச்சமடையாமலும் வலிவிழக்காமலும் இருந்து, இறப்பின் வரவை எதிர் நோக்கியிருந்து, அதன் கண்களை நேருக்கு நேர் சந்திப்பது என்பது வலிமை மிக்க குணநலன்கள், பண்பாடு கொண்டவர்களால் மட்டுமே இயல்வதாகும். திமிட்ரி பிசரேவ்
  • மனித உள்ளுயிரினுள் எவ்வளவு ஆழமாக தனித்தன்மை ஊடுரு விச் செல்கிறதோ, அவ்வளவு ஆழம் நிறைந்ததாக இறப்பைப் பற்றிய அச்சம் வேர் கொண்டிருக்கும். ஜி.வி. பிளக்கனோவ்

79