பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • இளமை என்பது ஒர் எதிர்காலத்தைப் பெற்றிருப்பதால் மகிழ்ச்சி யானதாகும். நிகலாய் கோகோவ்
  • மெண்மையான இளம் பருவத்திலிருந்து கருமை நிறைந்த, கசப்பான முதிர்ந்த பருவத்தை நீ அடையும் போது, அனைத்து மனித இயக்கங்களையும் உண்னுடன் எடுத்துச் செல்; பின்னர் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டி வழியிலேயே கிடக்கும்படி விட்டுவிட்டு நீ செல்லாதே. நிகலாய் கோகோவ்
  • எதிர்காலத்திற்கான விதைகள் விதைக்கப்படும் நேரத்தைப் போன்ற இளமைக்காலம் எனபது மக்களது வாழ்வின இளவேனிற் காலமாகும். ஒய்.பி.கினியாஜின்
  • இளமையே! இளமையே! உனது பெருமையின் மறைபொருள், எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற தனிமையில் இருப்பதன்று; ஆனால் எதனையும் உண்னால் செய்து முடிக்க இயலும் என்று சிந்திக்கும் ஆற்றலில்தான் உள்ளது.

இவான் துர்கனேவ்

  • இளமைப் பருவமே பெருந்தன்மையான உணர்வுகள் புத்துணர் வுடன் விளங்கும் காலமாகும். நிகலாய் செர்னசேவ்ஸ்கி
  • இளமை என்பது வாழ்வின் கவிதையாகும்; ஒவ்வொருவரும் அவரது இளமைப்பருவத்தில் அவர்களது வாழ்வின் மற்ற பருவங்

களில் இருந்ததைவிடச் சிறந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஒரு மனித உயிரின் இளமைப் பருவம் என்பது, வலிமை நிரம்பித் ததும்புவதாகவும், செயல்பாட்டிற்கான ஒரு காலமாகவும் இருப்ப தனால், அழகு நிறைந்த, பசுமையான ஒர் இளவேனிற் கால மாகும். அது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரே ஒரு முறை வருவ தாகவும், எப்போதுமே திரும்பி வராததுமாகவும் இருப்பதாகும். விசாரியோன் பெலின்ஸ்கி