பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • தண் பின்னே, குறைந்தது ஒரு தெளிவான, புதிய கருத்தை விட்டுச் செல்பவனும், மனித இனத்திற்கான ஒரு நற்செயலை விட்டுச் செல்பவனும், குழந்தைகளின்றி, சந்ததியினரின்றி இறந்து

போகின்றவர்கள் ஆக மாட்டார்கள்.

ஏ.ஏ.பெஸ்டுகேவ் - மார்லின்ஸ்கி


  • வலிமை நிறைந்த எதிர்பார்ப்புகள், விழைவுகள் நிறைந்த அறிவு வேட்கை, போராட்டம், நம்பிக்கை, தன்னம்பிக்கை கொண்ட இளமை என்னும் விலைமதிப்பற்ற மாபெரும் பரிசு ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாகும்.

நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி * உழைக்கும் பிரிவின், பொதுவுடமைக் கட்சியின் உண்மை நிறைந்த ஒரு மகனாக இருப்பதைவிட மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பது வேறெதுமில்லை என்பதால், ஒவ்வோர் இளைய உழைப்பாளியும் ஒரு போராட்ட வீரராக இருக்க விரும்ப வேண்டுமென்பதையே நான் விரும்புகிறேன். நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி

  • இளமை என்பது ஒரு மாபெரும் மந்திரவாதியாகும்.

அலெக்சாண்டர் பூஉ:கின் * அதனுடைய பெருந்தன்மையான ஆர்வத்தினாலும், நேர்மைக்கும் நியாயத்திற்கும் சமுக உண்மைக்குமான அதன் தெளிவற்ற விழைவுகளாலும், இளமை எண்பது முன்னேற்றத்திற்காகப் பணிபுரியும் மாபெரும் ஆற்றல்களில் ஒன்றாக இருப்பதாகும்.

என்.வி.செல்குனோவ் * இளமை எண்பது கனவு காண்பதாக இல்லையெனில், மனித வாழ்வு எண்பது அந்த நிலையிலேயே உறைந்துவிடும், இளமைக் கனவுகளின் நம்பிக்கை நிறைந்த சூழ்நிலையில் கண்ணுக்குத் தெரியாமலேயே, பல பெரிய கருத்துகளின் விதைகள் வளர்ந்து கனிந்துள்ளன. கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

83