பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξε த. கோவேந்தன்

வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலவே அவர்களும் நம்முடன் இணைந்து செயல்படுபவர்களாக இருப்பதினால்தான். நிகலாய் கோகோவ்

  • காலத்தின் கோரிக்கைகள், தேவைகளுக்காகப் பாருபடுபவன் தனது வாழ்வையே அதற்காக அளித்துக் கொண்டவன் உடன் பிறந்த, பிறவா மனிதனுக்கு நற்துணையானவனே தனது காலத்தை மீறி நிலைத்து வாழ்பவன்.

நிகலாய் நெக்ரகோவ்

  • மனித இனம் என்று நாம் அழைக்கும் முழுவதிலும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட இறந்து போனவர் போன்றிருப் பவர்களே அதிகமாக உள்ளனர். கே.ஏ.திமிரியாசெவ்
  • இயந்திரங்களால், மனிதர்களை அழிவற்றவர்களாக ஆக்க இயலாது. ஆனால் அறநெறிக் கோட்பாடு எண்பது இத்துடன் உறவு கொண்டதாக இருக்கவில்லை. பெருமை, மனசாட்சி ஆகிய வற்றின் விதிகளை ஏற்றுக் கொள்வதாக இருந்து, தவிர்க்க இயலாத முடிவை அமைதியுடனும், பெருந்தன்மையுடனும், எந்தவித அச்சமோ, வருத்தமோ இன்றிச் சந்திக்க நம்மை ஒப்புப் பவையாகவும் இருப்பதற்கு ஆன ஒரு பொதுவான வாழ்க்கை

முறையினை உருவாக்குவதாக அது இருக்க வேண்டும்.

என்.கே.மிகெய்லோவ்ஸ்கி

  • உனது வாழ்வின் முடிவினை நீ நெருங்கிச் செல்லும் போது, உனக்கு முன், உனது ஆவலைத் துண்டும் அடிவானம் விரிந்து இருப்பதைக் காண நீ விதிக்கப்பட்டிருக்கிறாயா என்று வருத்தத் துடன் உண்னை நீயே கேட்டுக் கொள். உன்னைத் தொடர்ந்து இளைஞர்களும், வலிவு படைத்த மக்களும் உள்ளனர் என்பதும், உண்மையைத் தேரும் இடைவிடாத முடிவற்ற இத் தேடுதலில், இளமையும், முதுமையும் ஒன்றுடன் ஒன்று கலந்து உறவாடு

கிறது என்பதும் ஆற்றல் அளிப்பவையே ஆகும்.

நிகலாய் சுகோவ்ஸ்கி

82