பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


சிரோ : அவன் உங்களை ஏமாற்றிவிடாமல் இருக்க வேண்டும்!

கலி : அப்படியெல்லாம் செய்ய மாட்டான். மெசர்நிக்கியா தன் மனைவியைப் பிள்ளை வரத்திற்காக தீர்த்த யாத்திரைக்கு அழைத்து வரும்படிச் செய்வதாக அந்தத் தரகன் எனக்கு வாக்களித்திருக்கிறான்.

சிரோ : பத்தினி திர்த்த யாத்திரை போனால், உங்களுக்கு அது எப்படி உதவும்.

கலி : அவள் நீராட வருமிடத்தில், அவள் என்னைக் கவனிக்கும்படியாகவும், என்னுடன் பேசிப் பழகும்படியாகவும் செய்து கொள்ள வேண்டும்.

சிரோ : அவ்வளவு மோசமான யோசனையில்லை. அதோ தரகன் லிகுரியோவும், மெசர் நிக்கியாவும் வருகிறார்கள்.

கலி : சரி, கொஞ்சம் மறைந்து நிற்போம்.

(இருவரும் மறைந்து நின்று கொள்கிறார்கள். அழகியின் கணவன் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் அந்தவழியில் பேசிக்கொண்டே வருகிறார்கள், பிறகு நிக்கியர் போய்விடுகிறார். தரகன் மட்டும் நிற்கிறான். வாலிபன் கலிமாக்கோ மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு வருகிறான்)

கலி : லிகுரியோ! நீ மெசர்நிக்கியாவுடன் வந்ததைப் பார்த்தேன். காரியம் எப்படி முடிகிறதென்று அறிந்து கொள்வதற்காகவே காத்திருந்தேன்.

லிகு : அந்த மடப் பயல், பெரிய முன்னெச்சரிக்கை உள்ளவனாக இருக்கிறான். இந்த பிளாரென்சை விட்டு அடியெடுத்து வைப்பேனா என்று விட்டான். எப்படியோ ஓரளவு சரிப்படுத்தியிருக்கிறேன். ஆனால், அதனால் உமக்கு நன்மையுண்டோ? சொல்லுமையா!

கலி : ஏன் இல்லை!

லிகு : கேளும் இந்தத் தீர்த்த ஸ்தலங்களுக்கு எத்தனையோ பேர் வருவார்கள். வேறு எந்தப் பயலாவது அழகி லுக்கிரிசியாவின் பேரழகில் ஈடுபட்டுவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் உம்மைக் காட்டிலும்