பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

வரிவிலக்கு அளிக்கப்பட்டது என்று நினைக்காமல்.- தங்கள் ஆதரவைப் பெறுவதற்காக ஆட்சிக் குழுவினர் செய்த ஏற்பாடு என்று அவர்கள் கருதினார்கள்.

எந்தக் குடியரசுத் தலைவனோ, அல்லது அரசனோ. ஆபத்துக் காலத்தில் மக்களுக்குச் சலுகையளிப்பதன் மூலம் அவர்கள் நல்லெண்ணத்தைப் பெறலாம் என்று எண்ணினால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டவனாகிறான் என்பதில் ஐயமில்லை. மக்களின் நல்லெண்ணத்தைப் பெறாமற் போவது மட்டுமல்லாமல் அவன் தனக்கே குழி தோண்டிக்கொண்டவனும் ஆவான்.

தீயசக்திகளை எதிர்க்கக் கூடாது:

ஒரு குடியரசுக்கு உள்ளாக ஒரு தீயசக்தி எழுந்தாலோ அல்லது வெளியிலிருந்து கொண்டு அந்த தீயசக்தி அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலோ, அதைச் சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடந்து படிப்படியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமேயல்லாமல் அடியோடு நிர்மூலப்படுத்த முயலக்கூடாது. அதை வேரோடழித்துவிட முயல்கிறவன் அதனுடைய வேகத்தை அதிகரிக்க உதவுபவனாகவே ஆகிறான். இப்படிப்பட்ட தீய சக்திகள் வெளிக் காரணங்களைக் காட்டிலும் பெரும்பாலும் ஒரு குடியரசின் உட்காரணங்களிலிருந்தே எழுகின்றன. அது பெரும்பாலும் ஒரு குடிமகனிடம் அவனிடம் இருக்கவேண்டியதற்குமேல் அதிகமான அதிகாரம் தேடிக்கொள்ள அனுமதித்து விடுவதன் பலனாக ஏற்படுகிறது; அல்லது சுதந்திரத்தின் உயிர்நாடியான நீதி முறையில் மாறுதல்கள் அனுமதிக்கப்படுவதால் உண்டாகிறது. அதன் பிறகு இந்த ஆபத்து, திருத்தப்பட முடியாத அளவுக்கு மோசமாக வளர்ந்துவிடுகிறது. எந்த விஷயத்தையும் ஆரம்பத்தில் ஆதரிப்பது மனிதர்களின் இயல்பாக இருப்பதால் இந்தத் தீய சக்திகளை அவற்றின் அடிப்படை வேர்க்கொள்ளும்போதே கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அதிலும் இப்படிப்பட்ட செயல்கள் ஏதோ சிறிது தகுதியுடையதாகத் தோன்றும் பொழுதும், இளைஞர்களால் செய்யப்படும் பொழுதும் இந்த ஆதரவு வெகு விரைவில் கொடுக்கப்படுகிறது. ஒரு குடியரசில் அசாதாரணமான தகுதிகள் வாய்ந்த ஒரு மேற்குலத்து இளைஞன் தலைதூக்குவதைக் கண்டால், குடிமக்கள் எல்லோருடைய கணகளும் அவன் பக்கம் திரும்புகின்றன. விளைவைப் பற்றி