பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

எண்ணிப் பாராமல் எல்லோரும் அவனுக்கு மதிப்பளிக்க முந்துகிறார்கள். இந்த மாதிரியாக வெகு விரைவில் அவன் உயர்ந்த நிலைக்கு வந்து விடுகிறான். குடிமக்கள் தங்கள் தவறுதலை உணர்கின்ற காலத்தில் அவனை அடக்கக்கூடிய வழிவகையற்றவர்களாகி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட தீயசக்திகளை விலக்குவதற்குக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமானவழி அவற்றைக் கடுமையாக எதிர்ப்பதல்ல காலத்திற்கேற்றபடி நடந்து, அவற்றைத் தாமாகவே அழியச் செய்ய வேண்டும். அல்லது அவற்றின் தீயவிளைவுகளை நீண்டகாலங் கடந்து நிகழும்படியாவது விட்டுவிடவேண்டும். இப்படிப்பட்ட தீயசக்திகளை ஒழிக்க விரும்புகின்ற அரசர்கள் அல்லது அதிகாரிகள் எல்லாவிஷயங்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து அவற்றைத் தாக்குகின்ற காரியத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நெருப்பை ஊதியணைத்து விடலாம் என்று அவர்கள் நம்பிவிடக் கூடாது. அந்தத் தீய சக்தியின் அளவையும் ஆற்றலையும் நன்றாக உணர்ந்து, அதை எதிர்க்கப்போதுமான பலம் தங்களிடம் இருக்கிறதென்று கருதினால், விளைவைப்பற்றி எண்ணாமல் அவர்கள் தாக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த முயற்சியையே கைவிட்டு விட வேண்டும்.

குடியரசு, சமயத்தில் சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுப்பதாய் இருக்கவேண்டும் :

ரோமாபுரியை ஆண்ட முதல் கொடுங்கோலரசன் சர்வாதிகாரி என்ற பெயரில் ஆண்டதன் காரணமாக, யதேச்சாதிகார ஆட்சிக்கு வழிகோலும் முறையில் ரோமானியர்கள் சர்வாதிகாரர்களை உற்பத்தி செய்ததாகச் சொல்லிக் குற்றஞ்சாட்டுகின்ற பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சீசர்கூட இந்தப்பட்டப் பெயருக்குத் தகுந்தாற்போல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டான் என்று கூறுகிறார்கள், ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்திற்குச் சர்வாதிகாரி என்ற பட்டம் இல்லாவிட்டால் வேறொரு பட்டம் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆதிக்க சக்தி எந்தப் பெயரையும் தனக்குச் சூட்டிக்கொள்ள முடியும். ஆனால், எந்த ஒரு பெயரும் அந்த சக்தியைக் கொடுத்துவிட முடியாது. பொது நீதி முறைப்படி உண்டாக்கப்பட்ட