பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1111037. “வைதீக பார்ப்பனிய சமயத்தினர் தம் கொள்கைக்கு மாறாகிய தேவாரங்களை மூடி மறைத்து விட்டனர்.”

1038. “இராசராசன் திருமுறைகளை மீட்டதின் மூலம் தமிழ் நாகரிகத்தையே மீட்டுக் காத்தான்.”

1039. “தாஜ்மகால், காதலி நினைவில் தோன்றியது. தஞ்சைப் பெரிய கோவில் மாதேவன் நினைவில் தோன்றியது.”

1040. “செய்திப் பரிமாற்றங்கள் அறிவை வளர்க்கும், நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும்; இழப்புக்கள் வராது தடுத்துவிடும்.”

1041. “திட்டமிடுதல் என்பது காலம், பொருள், ஆற்றலை முறைப்படுத்தி வீணாகாமல் தவிர்க்கவே.”

1042. “முன்னே புகழவேண்டும் என்று விரும்புகிறவர்கள், உண்மையில் புகழுக்குரியவர்கள் அல்லர்.”

1043. “செல்வத்தைத் தொடர்ச்சியாக ஈட்டும் பாங்கில் நிர்வகிப்பதே நல்ல நிதி நிர்வாகம்.”

1044. “துழ்நிலைகூடத் தற்சார்பைத் தோற்று விக்கும். சூழ்நிலையைச் சார்ந்த தற்சார்பு தவிர்க்க இயலாதது.”

1045. “மற்றவர்களுடைய பலவீனம், தனது பலம் என்று நினைப்பது தவறு.”

1046. “தமிழரசர்கள் ஆட்சியமைப்பை வலிமைப்படுத்த, கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பினார்கள்.”

1047. “நுகரும் பொருள்களாக, ஊதியம் வழங்கப்பெற்றால் உற்பத்திப் பெருகும்; பணவீக்கமும் குறையும்.”