பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தவத்திரு அடிகளார்81. “இந்து தர்மத்தினர் சாதிகளை ஒழித்தல், சமநிலைச் சமுதாயம் காணல் என்ற கொள்கைகளில் முரண்படுகின்றனர்.

திராவிடர் கழகமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடவுளை மறந்து விட்டு, கடவுள் தன்மைகளைப் படைக்க முயற்சி செய்கின்றனர். கடவுள் தன்மை சமுதாய அமைப்பில் நிலைபெற்றுவிட்டால் கடவுளை எளிதில் நினைவு கூரலாம்”.

82. “இலக்கியங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்காகவே தோன்றின. ஆனால் நடைபெற்றிருப்பது உரை விளக்கமே”.

83. “இதுவரை தோன்றிய எந்த ஞானியின் அடிச்சுவட்டிலும் மனித உலகம் செல்லவில்லை. மனம் போன போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது”.

84. “நமது முன்னோர்களும் நாமும் சமுதாயத்தின் இழிவுகளை மாற்றித் தரும் கடமையில் வெற்றி பெறவில்லை. இதுவே உண்மை”.

85. “சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்!”

86. “வடபுலத்திற்கு மட்டுமின்றி உலகத்திற்கு ஒரு பொதுச் சமயம் தேவை என்றாலும் அதற்கு உரியது தமிழகத்தின் சைவ சித்தாந்தச் செந்நெறியேயாம்”.

87. “இந்து சமயம்” என்ற பெயரில் ஒரு புது தத்துவம் போல ஸ்மார்த்தத்தைத் திணிக்க முயற்சி செய்ததின் பலனாக இந்து தர்மங்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான புதிய சமயங்களே தோன்றின”.