பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு அடிகளார்172. “எந்தப் பொருளையும் அதன் நிலையிலிருந்து மாற்றி அனுபவத்திற்கு நுகற்விற்குக் கொண்டு வரும் மனிதன் ஏன் மனிதக் குலத்தைப் பற்றி மட்டும் ஒதுக்கல் கொள்கையைக் கையாள்கிறான்? ஒதுக்கல் கொள்கையினர் அறிவிலிகள்; கோழைகள்!”

173. “இறைவா! உன்னுடைய எளிமை-பொதுமை-கருணை அளப்பரியது! ஆயினும் என்ன பயன்? வேலி போட்டுப் பழகும் மானிடச்சாதிக்குள் சிக்கிவிட்டாய் அவர்கள் உனக்குச் சாதி, குலம், இனம், மொழி, சமய வேலிகளை வைத்து நான் எளிதில் காண முடியாமல் தடுத்துவிட்டார்களே! இறைவா, ஏன் இந்த நிலை? என்னால் வேலிகளை கடந்து வரமுடியவில்லை. வந்தாலும் விடமாட்டார்கள்! நீயே வாயேன், வேலியைத் தாண்டி! உன்னைப் பார்த்து ஒரு அழுகை அழுவதற்கு சந்தர்ப்பம் கொடேன்!”

174. “இறைவா! உன்னோடும் நான் “கண்ணா மூச்சி’ விளையாட்டு விளையாடுகின்றேனே! உனக்குத் தெரியாதது என்ன? நீ என்றோ எங்களை விட்டு நீங்கிவிட்டாய்! கற்சிலை மட்டுமே கோயில்களில் உள்ளன!

மீண்டும் வா! கற்சிலையில் எழுந்தருளி ஆட்கொள் வாயாக! நின் சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன்! இனி, உன் சந்நிதியில் பாவம் செய்யமாட்டேன். இது சத்தியம்!”

175. “ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!”