பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு அடிகளார்“மூடர்களுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்துவிட எனக்கு அருள் செய்! வேண்டவே வேண்டாம்: விவேகம் இல்லாதவர்களுடன் தர்க்கம்”.

199. “கோடி செங்கல்கள் கொட்டிக் கிடந்தால் கட்டிடமாகிவிடுமா? அவற்றை முறையாக அடுக்கினால் வீடு! அதுபோல கோடிக் கணக்கில் மனிதர்கள் இருந்தாலும் சமுதாயம் தோன்றி விடுவதில்லை. ஒருவரை ஒருவர் தழுவியும் தாங்கியும் ஒப்புரவு அறியும் பண்புடன் வாழ்ந்தாலே சமுதாயம் தோன்றும்”.

200. “பழகத் தொடங்கிய தலை நாளில் இருந்த விருப்பம் போலவே, என்றும் விருப்பம் குறையாமல் இருப்பதே நட்பு”.

201. “ஒய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்”.

202. “இன்றைய சந்தையில் மனிதர்கள் கிடைக்கவில்லை”.

203. “எல்லா இனங்களும் வளர்கின்றன. தமிழினம், இருந்த புகழையும் இழந்து வருகிறது”.

204. “நொய்யரிசி கொதி பொறுக்காதது போல, அற்ப மனிதர்கள் சொல் பொறுக்கமாட்டார்கள்!”

205. “தமிழக வரலாற்றில் இன நலத்திற்காக வாழ்ந்த ஒரே தலைவர் அறிஞர் அண்ணாதான்”.

206. “மிகச் சிறிய செயல்களையும் கவனத்துடன் செய்து பழகினால் மிகப்பெரிய காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்”.