பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

65


அதனைச் சமயச் சார்பற்ற பொதுமை நூல் என்றே கூறி வரவேண்டும். இன்று பொதுமை உணர்வே தேவை.”

535. “மனத்திற்கு நல்ல பற்றுக் கோடு தராவிட்டால் அது சைத்தானைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொள்ளும். “வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு.”

536. “தவறுகள் செய்வது குற்றமன்று. தவறுகளை நியாயப் படுத்துவதே குற்றம்.”

537. “வெற்றிகள் பொருந்திய காரியங்களைச் செய்யாது தோல்விகளைத் தழுவி அதற்குச் சமாதானங்கள் சொல்லிக் கொண்டிருப்பது முறையன்று.“

538. “பொறிகள், அறிவின் வாயில்கள். அறிவின் வாயில்கள், தூர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.”

539. “மண்ணிலிருந்து மனிதரை விண்ணுக்கு ஏற்றுவது சாதனையல்ல. மண்ணை விண்ணகமாக்குவதே சாதனை.”

540. “கடவுளின் விருப்பம்; தான் தொழிற்படுவது மட்டுமல்ல; மானுடம் வெற்றி பெறவேண்டும் என்பதே கடவுளின் திருவுள்ளம்.”

541. “தன்னை வென்ற போதே மானுடம் வெற்றி பெறும்.”

542. “விதியின் பிழை!” என்று இராமன் தன்னம்பிக்கையின் காரணமாக விதியின் மீது பழி சுமத்துகிறான்.”

545. “புலால் வழியதான போர் வீரம் ஏற்பு உடையதல்ல. கற்ற, கேட்ட அறிவால் உருவாகும்.”

த-5