பக்கம்:சிந்தனை மேடை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எதுவோ அதை நமக்குள்ளேயே ஒவ்வொரு நாளும் நன்ருக வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆக்க நினவுகள் சிலருக்கு எந்தப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்தித்தாலும் இருண்ட முடிவுகளே தோன்றும். தெளிவற்ற பல முடிவு களை அடைகிற சிந்தனையைவிடத் தெளிவோடு கூடிய ஒரே முடிவை அடைகிற சிந்தனை உயர்ந்ததாகும். மனமும் நினைவுகளும் இருளடைந்து போய்விடாமல் காத்துக் கொள்வதற்கு முயல வேண்டும். எப்போதும் ஆக்க பூர்வமான சிந்தனைகளைச் சிந்திப்பதற்குப் பழகிக் கொண்டால் மனம் மலர்ச்சியடைந்த நிலையிலேயே இருப் பதைக் காப்பாற்றிக் கொள்ளலாம். சிறிதைப் பெரிதாக்கி, இல்லாததை இருப்பதாக எண்ணி நாமாகக் கற்பித்துக் கொண்டு வேதனைப்படுகிற கற்பனைத் துன்பங்களை நினைவுக் குள் நுழைய விடாமல் தவிர்க்க வேண்டும். சோர்வு காரணமாகவும், தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவும் பிறர் நம்முன் பேசுகிற சொற்களே மாறுபட உணர்வதன் மூலமாகவும் பொய்த் துன்பங்களாக மனத்தில் ஏற்படுகிற பிரமைகளைத் தடுக்க வேண்டும். சிந்தனையில் இருளடைந்த எண்ணங்கள் புகுவதன் காரணமாக மனம் அடிமைப்பட்டுப் போகும். இப்படிக் குருட்டு எண்ணங்களுக்கு அடிமைப்படும்படி மனத்தைச் சோர்ந்த வேளைகளில் கூடப் பழக்கப்படுத்தலாகாது. செல்வம் காரணமாகவும், செல்வாக்குக் காரணமாகவுமே ஆக்கம் பெறுவதாக நினைத்து மன நலத்தைப் புறக்கணிக்கக் கூடாது. 'மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்று திருவள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கிருர். நல்ல மனமும், பொய்க் கலப்பில்லாத எண்ணங்களும் இருந்தால் வாழ்நாள் பெரு கும் என்று நம்பலாம். பெரிய ஞானிகள் தியானம் செய் வதை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிருர்கள். சுக்கிலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/30&oldid=825901" இலிருந்து மீள்விக்கப்பட்டது