பக்கம்:சிந்தனை மேடை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65cm。 நோக்கமும் பயனும் தலைமுறைக்குத் தலைமுறை மாறி விடு. வது என்பது நாளைக்கும் உண்மைதான். - கலையின் வேகத்துக்குக் கலைஞர்களும் ஈடு கொடுக்க முடி யாமல் பின்தங்கி விடுகிறபோது அப்படிப் பின்தங்கி விடுகிற வர்களின் நாளைய நிலை என்ன என்பதைப் பற்றிச் சிந்தியுங் கள். உங்கள் சிந்தனைக்கு உடனே முடிவு கிடைத்து விடும். என்று நான் சொல்ல வ்ரவில்லை. முடிவு கிடைக்கிற வரை யில் இந்த விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க உங்களால் முடிய வில்லை என்ருலும் யாராவது எங்காவது இதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை மட்டும் சொல்லி: வைக்கிறேன். மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு தமிழில் எழுத்தாளன் என்ற பதத்துக்குப் பொருள் விரிவு சொல்லும்போது எழுத்தாண்மை உடையவன் என்று பொருள் விரிவு சொல்லுவதா? அல்லது எழுத்தை ஆள் பவன் என்று பொருள் விரிவு சொல்லுவதா? இந்தப் பதம் மிகவும் பழமையானது என்பதைப் பற்றிச் சிறிதும் சந்தேக மில்லை. எட்டுத் தொகை நூல்களில் மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்' என்ருெரு பெயர் காணப்படுகிறதே! கை யெழுத்துப் போடுவதிலிருந்து கணக்கு எழுதுவது வரை எழுத்து எல்லோரையும் ஆள்வதைக் காண்கிருேம். ஆனல் எழுத்தை ஆள்கிறவனே எங்காவது எப்போதாவதுதான் காண்கிருேம். எழுத்தை ஆள்வதும் ஓர் ஆண்மை என்று: ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? . . . . பத்திரிகையாளன், நிருபர், ஆசிரியர் இவர்களிலிருந்து வேருனவன் எழுத்தாளன். எழுத்தாண்மையில் ஆசிரியத். தன்மையும் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாரதிக்குப் பின்பு ஏற்பட்ட புது யுகத்து எண்ணங்களைப் பிரதிபலிக்கிற எழுத்தை யார் யார் ஆள்கிருர்களோ அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/67&oldid=825979" இலிருந்து மீள்விக்கப்பட்டது