பக்கம்:சிந்தனை மேடை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·靶6 கள் அனைவரும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களே. மறுமலர்ச்சி எழுத்தின் யுகம் இன்னும் நிகழ்ந்து கொண்டு தானிருக் கிறது. இதனினும் புதிய மாறுதல் ஏற்படுகிறவரை நாளேக்கும் தொடர்ந்து நிகழ்கிற யுகம்தான் இது. இந்த மறுமலர்ச்சி யுகத்தில் எழுத்தாளர்களின் பொறுப்பு என்ன என்பதை எழுத்தாளர்களே வரையறுத்துக் கொண்டா லொழிய வேறு யாரும் கட்டளையிட்டோ அதிகாரம் செய்தோ வரையறுப்பதற்கில்லை. தங்கள் பொறுப்பைத் தாங்களே வரையறை செய்து கொண்டாலொழியத் தங்களேக் கட்டுப்படுத்த வேறெவரும் இல்லை என்பது போலச் சுதந்திரமாயிருப்பவர்கள் எப்போதுமே மிகவும் கவனமாயிருக்க வேண்டும். இப்படிப் பிறரால் கட்டுப் படுத்த முடியாத சுதந்திர முள்ளவர்களுக்கு இரண்டு மடங்கு பொறுப்பு உண்டு. தங்களேக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒன்று. தங்களால் ஆளப் படும் துறைகளைக் கட்டுப்பாட்டோடு ஆள வேண்டிய பொறுப்பு மற்ருென்று. மிகவும் சுதந்திரமாக விடப்பட்ட வர்களுக்குத் தான் பொறுப்பும் மிகுதி. ஒரு தலைமுறையில் காவிய ஆசிரியர்களும், அறநூலாசிரியர்களும், புலவர் பெரு மக்களும் செய்த இலட்சிய இயக்கத்தை இன்று வேறுவித மாக நாம் செய்கிருேம் என்ற பெருமிதம் எழுத்தாளர் களுக்கு இருக்க வேண்டும். "உயர்ந்த காரியத்தைச் செய் கிறவர்களாக நாம் இருக்கிருேம்’ என்ற எண்ணமே ஒரு பொறுப்புத்தான். - - 'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்" என்று கலித்தொகையில் அழகாகச் சொல்லி வைத்திருக் கிரு.ர்கள். இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் இதை அவசியம் ஞாடகம் வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கிய பாரம்பரியத்தின் பழம் பெருமை, புதுப்பெருமை எல்லாவற்றையும் கட்டிக் காக்கிற பொறுப்பு ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் உண்டு. பெருமை தன்னிடமிருந்து குழுவாமல் கட்டிக் காப்பதற்கு அப்படிக் காக்கிறவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/68&oldid=825980" இலிருந்து மீள்விக்கப்பட்டது