பக்கம்:சிந்தனை மேடை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 இலக்கியங்களைத் தந்திருக்கிருர்கள். எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வியிலேயே, எவ்வளவு காலம் நிற்கும்படி எழுத வேண்டும்?’ என்ற கேள்வியும் உள்ளடங்கி யிருக்கிறது. வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு இரு முறை, மாதத்துக்கு ஒரு முறை என்று பத்திரிகைகள் வெளி வருவதற்கு எல்லே வகுத்திருக்கும் தேதியும் கால அளவுமே அவற்றில் வெளிவரும் விஷயங்கள் நிற்க முடிந்த கால எல்லை யாகவும் இருக்க வேண்டுமென்று இப்போது பலர் நினைத்துக் கொண்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? எந்தச் சொற்களில் பிறக்கிறது? எவ்வளவு சத்தியமுள்ள மனத்தி லிருந்து பிறக்கிறது? எதைப் பிறப்பிக்கிறது? இவை எல்லா வற்றையும் பொறுத்துத்தான் இலக்கியம் நிற்கிற காலம் அமைகிறது. செய்திப் பத்திரிகைகளைப் போலப் பிறந்து வெளியான சில மணி நேரத்துக்குள்ளேயே அழிந்து பழைய தாகிப் போய் விடுகிற நிலைமை இலக்கியங்களுக்கும் ஏற்பட லாகாது. அந்த அளவுக்குப் படைப்புக்களையும் படிக்கிறவர் களையும் மலிவாகக் கொண்டு போய் விட்டால் பின்னல் எப்பொழுதும் மாற்றி அமைக்கவே முடியாமல் போகும். "இப்படித்தான் எழுத வேண்டும்’ என்று கற்பனை எழுத் தாளர்களுக்கு யாரும் கட்டளை இடுவாரில்லை. அவ்வாறு கட்டளை இடுவார் யாரும் இல்லாததனால் தான் அவர்களுக் குப் பொறுப்பு அதிகம் என்று குறிப்பிட நேர்ந்தது. எழுத் தின் உயர்ந்த பண்புகள் எழுதுகின்றவனுடைய கற்பு. எழுத்தின் உயர்ந்த பக்குவங்கள் எழுதுகின்றவனுடைய வாழ்க்கையின் பண்புகள். எழுதுகின்றவர்கள் ஊர் நடுவில் கோபுரத்தைப் போல் எல்லாரும் காணும்படி பொலிந்து தெரிபவர்கள். அந்தக் கோபுரம் மங்கலமான காட்சி யாகத் தோற்றமளித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அக்கறை காட்டுவது தவருகாது. - எனவே எதை எழுத வேண்டும்’ என்பதைவிட எதற் காக எழுத வேண்டும்’ என்பதைச் சற்றே அதிகமாக ஞாபகத்தில் பதித்துக் கொள்ளுவது அவசியமாகிறது. பாரதியைப்போல் ஒரு மொழியினுடைய நீண்ட வரலாற் சி. மே, 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/71&oldid=825988" இலிருந்து மீள்விக்கப்பட்டது