பக்கம்:சிந்தனை மேடை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதுமா? தமிழ் நாட்டுப் பெண்கள் பாரதிக்கு இப்போது, செலுத்திக் கொண்டிருப்பதைவிட இன்னும் அதிகமான மரி யாதை செலுத்தக் கடமைப் பட்டிருக்கிரு.ர்கள் என்பதை மறுபடி ஞாபகமூட்டுகிறேன். 'அன்னமூட்டிய தெய்வமணிக்கரத்தின் ஆணைகாட்டில் அனலை விழுங்குவோம்’ என்று பாடிய வாய் தாய்க்குலத்துக்கு எவ்வளவு மரியாதை செய்திருக்கிறதென்று உணருகிறபோது நமக்கு மெய் சிலிர்க் கிறது. இந்தத் தேசமாதாவுக்குப் பிறந்த கவிப் புதல்வர் களில் ஒருவரென்ற முறையில் வங்காளிக் கவிஞராகிய தாகூரையும் கூடத் தன் வாக்கினல் பெருந் தன்மையோடு புகழ்ந்திருக்கிருன் பாரதி. ஆனல் தாகூரோ பாரதி என்று தன் காலத்தில் தெற்கே ஒரு கவி இருந்ததை நினைவூட்டவும் இல்லை. பெண்ணை உயர்வாக வழிபடுகிற இடங்களில் தாயாகவும் சக்தியாகவும், நளினமாக வழிபடுகிற இடங் களில் காதலியாகவும், நாடாக வழிபடுகிற இடங்களில் பாரத மாதாவாகவும், இயக்கமாக வழிபடுகிற இடங்களில் சுதந்திர தேவியாகவும் உருவகம் கண்ட மாபெருங் கவி பாரதி: ಹಸಿರುಗಿನಿಶಿ Glಧಿಗಿಮಿಜು! "எழுத்து-கலையா? தொழிலா?’-என்ற விவாதத் திற்குப் பலர் பலவிதமாகத் தீர்வு கண்டிருக்கிருர்கள். சிலர் அது ஒரு கலைத் தொழில் (Cultural Work) என்று இருபுறமும் சார்ந்து தெளிவு கூறியிருக்கிருர்கள் தமிழகத்தில் நானறிந்த வரை அது முழுமையான அளவில் கலையாகவும் இல்லை. முழு மையான அளவில் தொழிலாகவும் இல்லை. பத்திரிகைகளைப் பெரும் முதல் போட்டு நடத்துகிற வர்கள் அதை ஓர் industry (தொழில்) ஆகவே நடத்த விரும்புகிருர்கள் எனவே பெரிய பெரிய வியாபார ரீதியான பத்திரிகைகளில் அதை நடத்து கிறவரின் வியாபார மனப்பான்மையோடு ஒத்துத்தான் கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/83&oldid=826013" இலிருந்து மீள்விக்கப்பட்டது