பக்கம்:சிந்தனை மேடை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 பயிற்சி முதலிய எல்லாம் கலந்த ஒரு கதம்பமாக அல்லவா இருக்கும்! இத்தகைய இசைக் குற்றங்கள் சிறிதும் வராமம் பாடுவதுதான் உள்ளாளப் பாடல் முறை. காந்தருவதத்தை வீணையுடன் வாய்ப்பாட்டும் பாடிய கலைத் திறத்தைச் செய் யுளிலே விளக்கமாக சித்திரிக்க வந்த சீவக சிந்தாமணி ஆசிரியர், - "கருங்கொடிப் புருவமேரு கயல் நெடுங் கண்ணுமாடா அருங்கடி மிடறும் லிம்மா(து) அணிமணி எயிறுந் தோன்ரு இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடிளுளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்’ - (சீவக சிந்தாமணி - 6.58) மிடறு-கழுத்து: எயிறு - பல். என்று அவையிற் கூடியிருந்தார் வியக்கும் வண்ணம் பாடி ளுள் என்பதை விளக்கினர். சிந்தாமணிக்கு உரைகண்ட நச்சிளுர்க்கினியர் இச்செய்யுளின் உரையில் இசை நூல் மேற் கோளுடன் பாடல் நெறிகளை எடுத்துரைத்து அவற்றுள் உள்ளாளப் பாடல்நெறியின் சிறப்பையும் விளக்கிக்கூறினர். உள்ளாளப் பாட்டுப் பாடுகின்றவர்கள், 'இடை பிங்கலையை இயக்க மறுத்து மூலாதர முதல் பிரமரந்திரமளவும் இயக் கம் ஆக்கி நடுவு தொழில் வரப் பாட வேண்டும்’ என்பது நச்சிஞர்க்கினியர் விளக்கம். - 'கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா ' ' . . . . . பண்ணளவும் வாய்தோன்ரு பற்றெரியா-எண்ணிலவை கள்ளார் நறுந்தெரிய்ற் கைதவனே கந்தகுவர் - உள்ளாளப் பாட லுணர்.' - - (கொடிறு-கன்னம்) என்பது இப் பாடல் நெறிக்கு இசை நூல் மரபு’ கூறும் இலக்கணம். திருவிளையாடற் புராணம் விறகு விற்ற படலம், சிந்தாமணியில் மீண்டும் விமலையாரிலம்பகம் முதலிய பகுதி களில் இசை ப்ாடுவோர்க்கு ஆகாத குற்றங்களாக இவை விவரிக்கப் படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/89&oldid=826024" இலிருந்து மீள்விக்கப்பட்டது