பக்கம்:சிந்தனை மேடை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-89 அபூர்வமாகக் காண முடிகிறது. நம்பிக்கையில், வாக்கு நாணயத்தில், உழைப்பில், படிப்பில், தொழிலில், எதிலும் "பக்கா'வாக இருந்த ஒரு தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து எதையும் ஒரளவு சமாளித்துக் கொள்ளவும், சரி செய்துகொள்ளவும் முடிந்த ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் சோனி’யான தலைமுறை. எதிலும் மிக விரைவில் சலிப்பு அடைந்து விடுவதும், கொஞ்ச உழைப்பில் அதிகம் சர் பாதிக்க ஆசைப்படுவதும் மிக்க மனிதர்களை இந்தத் தலைமுறையில் அதிகமாகப் பார்க் கிருேம். எங்கும் எதிரே பார்க்கிருேம் - அற நூல்களிலும், மரபுகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு பிறர்க்குத் தீங்கு செய்ய அஞ்சியும் தனக்கு மட்டுமே நன்மை தேட நாணியும் இருந்க ஒரு தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது இந்நிலை ஒரு துறையில் மட்டுமல்ல; பல துறைகளிலும் இதே நிலைமைதான் எதிரே தெரிகிறது. - கலைகள் சங்கீதம், சிற்பம், நடனம், முதலிய கலைகளை நோக்கும் போது இந்த மறைவும் இழப்பும் சற்று அதிகமாகவே தெரி கிறது. மார்பளவு தண்ணிரில் நின்று குரலினிமைக்காக அசுர சாதகம் செய்யும் வித்வான் இனிமேல் அபூர்வமான வர்தான். அரியக்குடி, எம் எஸ்., சித்துரர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை மணி, டி. கே. பட்டம்மாள், போன்ற கர் நாடக சங்கீத ரத்னங்களுக்குப் பிறகும் ஒரு சீரான திறமை பும், நம்பிக்கையும் உள்ள ஒரு தலைமுறை இருக்காது இனி. இறுகிய கருங்கல்லச் செதுக்கி நரம்பும் தெரியும் உயிர்த் துடிப்புள்ள சிற்பங்களே உருவாக்கு தலைமுறையும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது கல்லில் வேலை செய்யும் சிற்ப ஸ்தபதிகளின் குடும்பங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலை யில்தான் தமிழ் நாட்டில் இன்று மீதமிருக்கின்றன. ஒவ் வொரு தூணில் ஓர் இசை ஒலி எழும்படியான சப்த்சுவர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/91&oldid=826030" இலிருந்து மீள்விக்கப்பட்டது