பக்கம்:சிந்தனை வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகங்கள், பதவிகள், பட்டங்கள்

பல்கலைக் கழக உயர் பட்டப்படிப்பை முடித்து, முதல் வகுப்பில் சிறப்பாகத் தேறி வேலைக்கு அலைந்து கொண்டிருக் கும் நண்பர் ஒருவரிடமிருந்து சமீபத்தில் எனக்கு ஒருகடிதம் siri; 3655.535'. Sigi di syarif, have spent more than sixteen years to learn, that I have learnt nothing” (நான் எதையும் தெரிந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொள்வதற்கே பதினறு வருஷங்களுக்குமேல் ஆகி விட்டது)-என்று வருத்தத்தோடும், விரக்தியோடும் குறிப்பிட்டிருந்தார்.

பெரும்பாலான இந்தியப் பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தைப் பொறுத்தவரை, இந்த வாக்கியம் மிக மிகப் பொருத்தமானதாயிருக்கும். சில பல்கலைக் கழகங்களோ கல்வியை வளர்க்காததுடன், வேறு வகைத் தகராறுகளையும் பிரச்னைகளையும் தாராளமாகவே வளர்க்கின்றன. அம்மாதிரி பல்கலைக் கழகங்களில் வளராத அம்சம் என ஏதாவது இருக் குமானல் அது, பரிதாபத்துக்குரிய கல்வியே.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில், சுமார் பத்துக் கும் இருபதுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் தான் பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஏறக்குறையப்பத்தொன்பது சர்வகலாசாலைகள் என்பதாக நினைவு. இதனால்தானே என்னவோ அன்று பிரச்னைகளும், சர்ச்சைகளும், கலகங் களும் குறைவாயிருந்தன. இப்படி ஆராய்வது தர்க்க ரீதியாகச் சரியில்லை என்ருலும், வேடிக்கையாகவாவது இப்படியும் நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

30 வருடங்கள் கழித்து இன்று சுமார், நூற்றுக்கும் இருநூறுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பல்வேறு வகை யூனிவர்ஸிட்டிகள் இந்தியாவில் இருக்கின்றன. ஏறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/107&oldid=562349" இலிருந்து மீள்விக்கப்பட்டது