பக்கம்:சிந்தனை வளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனே வளம் ፲ 3 ፰

அதன் ஆட்சியும்தான் காரணம்’ என்று அப்புறமாகக் கூட்டத்துக்குக் கூட்டம் பேசிக் கொண்டிருக்க முடிந்த நாடு இது. பிரச்னைகளைத் திசை திருப்பி விட்டே அடுத்த தேர்தல் வரை காலம் கடத்திவிட முடிந்த அளவு அரசியல் அறியாமைகளும், வீர வணக்க மனப்பான்மையும் இந்நாட்டில்தான் நிரம்பிக் கிடக்கின்றன. -

மின்சார வெட்டு, விவசாயிகள் பிரச்னை, பால் சப்ளையில் கோளாறுகள் எல்லாம் அமளி து மளிப்படுகிற நேரத்தில் சென்னைக் குதிரை வீரன் சிலைகளை மதுரைக்குக் கொண்டு போவதுபற்றிப் பேசிக் கொண்டிருப்பதும் இங்கேதான் சாத்தியமாகக் கூடியது.

இந்தத் திசை திருப்பும் கலையில் மந்திரிகளும், ஆட்சி களும் தேர்ந்தபின், நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பது போல் அதிகாரிகளும் தேர்ச்சி பெறத் தொடங்கி விட்டார்கள். திசை திருப்பப் பயிற்சி பெறத் தொடங்கி விட்டார்கள். -

இதே ரீதியில் போய்க் கொண்டிருந்தால் ஏமாற்றுகிற வர்களின் எண்ணிக்கை அளவற்றுப் பெருகி விடும். பின்பு ஏமாறுவதற்கு ஆட்களே மீதமிருக்க மாட்டார்கள். ஏமாறு வதற்கு ஆட்கள் மீதமில்லா விட்டால் இன்றைய இந்தியத் தலைவர்களில் தொண்ணுாற்ருென்பது சதவிகிதம் பிழைப் பில்லாமல் நடுத்தெருவுக்கு வந்து அநாதைகளாக நிற்கும் படி நேரிட்டு விடும்.

இன்றைக்குப் பல விஷயங்கள் ஏமாறுகிறவர்களை நம்பித் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏமாறுகிறவர் கள் இல்லாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாத அளவு பலவீனமான திறமைசாலிகளைக் கொண்ட நாட்டில் திசை திருப்பும் முயற்சிகளைக் கொண்டே மக்களைச் சமாளிக்க முடிந்திருக்கிறது. . . .

கடந்த பல ஆண்டுகளாக மின்சாரத் தட்டுப்பாடு என்பது ஒவ்வோர் இந்திய மாநிலத்தையும் கடுமையாகப் Tಣ್ಯಸ್ತ್ರ வருகிறது. தொழில் உற்பத்தி சிதறிப் பொருளா

இ.-9 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/135&oldid=562377" இலிருந்து மீள்விக்கப்பட்டது