பக்கம்:சிந்தனை வளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. போலிவலாம் பொதுமக்களும்:

கலவரங்கள், அரசியல் ஊர்வலங்கள், கறுப்புக் கொடி. ஆர்ப்பாட்டங்கள், கோஷ்டிச் சண்டைகள் இவற்றை எல்லாம் பற்றிப் பத்திரிகைகளில் படிக்கும்பொழுது, நாலைந்து போலீஸ்காரர்களும் காயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிரு.ர்கள் என்பதையும் சேர்த்தே இப்போதெல்லாம் படிக்க நேர்கிறது.

போலீஸ்காரர்களைத் தங்கள் எதிரிகளாகவே நினைக்கும் பொது மக்களும், பொது மக்களை எல்லாம் தங்கள் எதிரி களாகவே நினைக்கும் போலீஸ்காரர்களும் இங்கே இருக். கிரு.ர்கள்.

பழைய சுதந்திரப் போராட்ட காலத்துத் தேச பக்தர் களுக்கு, பிரிட்டிஷ் அரசாங்க ஏவ்லாட்களாக இருந்த பழைய போலீலைப்பற்றி என்ன மனப்பான்மை இருந்ததோ அதே மனப்பான்மைதான், இன்றைய அரசியல் கட்சி: களுக்கு இன்றைய போலீஸைப் பற்றியும் இருக்கிறது.

ஒரு போலீஸ் ஊழியன் என்பவன் யூனிஃபார்ம் அணிந்த குடிமகன். ஆனால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொது நலனைப் பொறுத்தவரை யூனிஃபார்ம் அணியாத போலீஸ் காரணுவான்’ என்று நம் நாட்டின் தலைநகராகிய டெல்லி’ போலீஸ் கமிஷனர் அலுவலக முகப்பில் அழகாகஒ ரு வாக்கியம் எழுதிப் போட்டிருக்கிருர்கள். படிக்க நன்முகஇருக்கிறது.

ஆளுல், நடப்பு என்னவோ இதற்கு நேர்மாருக இருந்து வருகிறது. தானும் இந்நாட்டைச் சேர்ந்த குடி மக்களில். ஒருவர் என்பது போலீஸ்காரருக்குச் சில சமயங்களில் மறந்து விடுகிறது. பொது மக்களில் சிலர் தடியெடுத்தவன் தண்டல் காரன்” என்ற பாணியில் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விடுகிருர்கள். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/145&oldid=562387" இலிருந்து மீள்விக்கப்பட்டது