பக்கம்:சிந்தனை வளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...146 சிந்தனை வள்ம்

வரவேற்கக் காத்திருக்கவில்லை. கூட்டத்திலும், நெருக் கடியிலும் எளிமையாக வந்திறங்கிய தேசாயை யாரென்று. கவனிக்காத காவலர், 'உள்ளே போக அனுமதிச் சீட்டோ . பாலோ, இருக்கிறதா?’ என்று கேட்டு விட்டார்.

மன்னிக்கவும். எனக்கு அனுப்பியிருந்த அழைப்புக் கடிதத்தையும், பாஸையும் மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். இதோ போய் எடுத்து வந்து விடுகிறேன்: ' என்று கூறி, மறுபடி காரில் ஏறி வீட்டுக்கு விடச் சொல்லி , விட்டில் போய் அவற்றை எடுத்துக்கொண்டு வந்தாராம்

தேசாய்.

பொது மக்கள் கட்டுப்பாடாக நடந்து கொண்டால் தான் போலீஸ் கட்டுப்பாடாக இயங்குவதற்கு முடியும். பிரிட்டனில், எலிஸபெத் அரசி போக்குவரத்து விதிகளுக்கு முரணுகக் காரை ஒட்டினல்கூடச் சாதாரண டிராஃபிக் கான்ஸ்டபிள் அரசியைத் தடுத்து நிறுத்தி அபராதம் வாங்கி விட முடியும். கான்ஸ்டபிளும் கூச மாட்டார், அரசியும் மிரட்ட மாட்டார். நான் வார்ஸாவில் இருந்தபோது, போலிஷ் கலாசார அமைச்சகம் எனக்கு அளித்திருந்த இண்டர் பிரெட்டரான மாரெக்பிரிஸ்கி என்பவர் ஜீப்ராக்ராஸ் இல்லாத இடத்தில் சாலையைக் கிராஸ் செய்த தற்காக, 250 ஸ்லாட்டி (நூறு ரூபாய்க்கு மேல்) அபராதம் கட்டியதை என்கண்ணுலேயே பார்த்தேன்.

விதிகளையும், சட்டங்களையும், ஒழுங்கையும் தலைவர் களிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரும் மதித்து நடக்கிற தேசத்தில்தான் போலீஸுக்கும் மரியாதை இருக்கும்; பொது மக்களுக்கும் மரியாதை இருக்கும். சுதந்திரத்திற்குப்பின் தம் நாட்டில் தலைவர்களும், பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் Privillaged class ஆக நினைத்துக்கொண்டு, எதை எப்போது மீறிலுைம் தாங்கள் தண்டிக்கப்படக் கூடாதவர் கள் என்று பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பாவனையின் காரணமாகச் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பதில் டபிள் ஸ்டாண்டர்டு ஏற்பட்டு விட்டது. அரசியலில் ஈடுபாடுள்ள குடும்பங்கள் சம்பந்தப்பட்ட சட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/148&oldid=562390" இலிருந்து மீள்விக்கப்பட்டது