பக்கம்:சிந்தனை வளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫全& சிந்தனை வளம்

தான் பொது மக்களின் காவலாளி என்பதைவிட, அவர் களுடைய உண்மையான நண்பன் என்ற உணர்வு போலீ லாக்கு வர வேண்டும். தங்கள் ஜம்பம் சாயாத இடத்தில் ஒடுங்கிக் கொள்வதும், ஒதுங்கிக் கொள்வதும், அப்பாவி களிடம் புலிபோல் பாய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

தங்களைக் கண்டு மக்கள் பயப்படுகிரு.ர்கள் என்பது போலீஸுக்குப் பெருமை இல்லை. தங்களை மக்கள் நம்பு கிருர்கள் என்பதுதான் போலீஸுக்குப் பெருமை, தங்களைக் கண்டு மக்கள் மிரளுகிருர்கள் என்பது போலீஸுக்குப் பெருமை இல்லை. தங்களே மக்கள் மெய்யாக மதிக்கிரு.ர்கள் என்பதுதான் போலீஸுக்குப் பெருமை. சட்டமும், ஒழுங் கும் பலருடைய பயங்களை நீக்குவதற்காக ஏற்பட்டவையே தவிர, பயமுறுத்துவதற்காக ஏற்பட்டவை அல்ல. போலீஸ், ஜனங்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். ஒன்றின்மேல் நம்பிக்கை ஏற்படாவிட்டால் அதன்மேல் மதிப்போ, மரியாதையோ வராது. பயமுறுத்தி வருகின்ற மதிப்பும், மரியாதையும் நீடிக்காது. நிலைக்காது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து அவரவர்களுடைய பங்குக்குப் போலீஸ் என்ற பொதுநல அமைப்பைச் சீரழித்து வைத்திருக்கிருர்கள். வீரியமற்ற தாக்கி இருக்கிருர்கள் நம்பத் தகாததாகவும், டபிள் ஸ்டாண்டர்டு உள்ளதாகவும், மரியாதையற்றதாகவும்: ஆக்கி வைத்திருக்கிருர்கள். -

முதலில் அவர்கள் திருந்தினுல்தான் போலீஸ் திருந்த, முடியும். ஓரிடத்தில் போலீஸ் நியாயமாக நடந்து கொள்ள முயல்வது தங்களுக்கு இடைஞ்சலாக முடியும் போலிருந் தால் கூட ஆளும் கட்சி தலையிடக் கூடாது. போலீஸ் நியா. மாக நடந்து கொள்வது தங்களுக்கு இடைஞ்சலாக இருந்: தால்கூட எதிர்க் கட்சியும் தலையிடக்கூடாது.

எது மக்களுக்கு நல்லது, எது மக்களுக்குப் பாதுகாப்பு, எது மக்களுக்கு ஒழுங்கு, எது மக்களுக்கு நியாயம் என்பது: தான் போலீஸுக்கு முக்கியமே தவிர, எது ஒரு கட்சி அரசியல் ஆட்சியாளர்களுக்கு மட்டும் உகந்தது என்பது முக்கியமில்லை. . - ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/150&oldid=562392" இலிருந்து மீள்விக்கப்பட்டது