பக்கம்:சிந்தனை வளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 1 5 I

இந்தியாவின் பல்வேறு பிரதேசங்கள் என்னும் மடிப்புக் கள் உள்ள பெரிய தேசிய வேஷடிக்குச் சரிகைக் கரை போன்றது. சம்ஸ்கிருத மொழி. கரையே வேஷ்டியாகி விடாது என்ருலும். கரை வேஷ்டியை அழகு படுத்துகிறது என்பதையும், சில வேளைகளில் வேஷ்டி கிழியாமல் காக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் சிறந்தவையும், பல மொழிகளைப் படைக்க முடிந்த பொடன்ஷியாலிட்டி உள்ளவையுமாக உலக மொழியியல் அறிஞர்கள் எண்ணுபவை மூன்றே மூன்று மொழிகள்தாம். அவை கிரீக், லத்தீன், சம்ஸ் கிருதம் என்பவையே. இந்த மூன்றில் முக்கியமானது சம்ஸ் கிருதம். இம்மூன்றில் சம்ஸ்கிருதத்தின் சாயல் உள்ளது என்று கருதப்படும் ஜெர்மானிய மொழிகளின் ஒரு .பிரிவாகிய ஆங்கிலோ சாக்ஸனைத்தான் இன்றைய ஆங்கில மொழிக்கு முன் அமைப்பாகக் கொள்கிருர்கள். இந்த வகையில் சம்ஸ்கிருதம் ஆங்கிலத்திற்கு அப்பனுக்கும் அப்பணுகக் கருதப்படுகிறது. இன்று மேற்கு ஜெர்மனியில் 60-க்கும் மேற்பட்ட சமஸ்கிருத இன்ஸ்டிட்டியூட்கள் உள்ளன. உலகெங்கும்- அவை கம்யூனிஸ் நாடுகளாயிருந் தாலும், ஜனநாயக நாடுக ளாயிருந்தாலும்-சம்ஸ்கிருத ம்ொழி போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அதன் மேல் இனம் புரியாத (ஒருவேளை தவருக இனம் புரிந்து கொண்டும் இருக்கலாம்)வெறுப்பு பரப்பப்படுகிறது. கேரளத் தில் இஸ்லாமிய கிறிஸ்தவ சம்ஸ்கிருத அறிஞர்களையும் ஈழவ ரான சம்ஸ்கிருத அறிஞர்களையும் சந்திக்கலாம், நாயர்களில் கூட சம்ஸ்கிருத அறிஞர்களைச் சந்திக்கலாம்: வங்காளத்தி லும் இதே நிலைமைதான்., தமிழ் நாட்டில் புரோகிதர்களைத் தவிர வேறு யாருக்கும் சம்ஸ்கிருதம் தெரிந்திராது என்ற அனுமானத்தின் காரணத்தாலேயே சமஸ்கிருதம் என்னும் பக்குவமான இலக்கிய மொழி ஒரு புரோகித பான்ஷ’ யாகச் சித்திரிக்கப்பட்டு, பாமரத் தனமானதும், மெளடிகம் நிறைந்ததுமான ஒருவகைப் பிரசாரத்துக்கு ஆளாக்கப்பட்டு

விட்டது. இது துரதிருஷ்ட வசமானது. அறிவாளிகள் வருத் தப்பட வேண்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/153&oldid=562395" இலிருந்து மீள்விக்கப்பட்டது