பக்கம்:சிந்தனை வளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மூளை வறட்சியே! உன் மறு பெயர்தான் இமிடேஷனு?

நம் தலைமுறையில் வாழும் அல்லது முந்திய தலைமுறை யில் வாழ்ந்த ஒரு பெரிய திறமைசாலியிடமிருந்து அதே துறையில் திறமைசாவியாக ஆசைப்படுகிறவர்கள் துாண்டு தலும், ஊக்கமும் பெற வேண்டிச் சிலவற்றைக் கவனிப்பதும் கடைப்பிடிப்பதும், மேற்கொள்வதும் தவறுகள் இல்லை.

துரண்டுதல் ஊக்கம் (இன்ஸ்பிரேஷன்) பெறுவது தவறில்லை. ஆனால், இமிடேஷன் செய்வது தவறு. நாய் போல், கிளி போல், பூனை போல், மிமிக்ரி செய்வது ஒரு கலை. ஒருவர் பேசுவது போல் பாடுவது போல் இன்னொருவர் சில விநாடிகள் பேசிக் காண்பிப்பதும் அப்படி அதே வகையில் ஒரு கலை. ஆனால், உண்மையாகவும், தீவிரமாகவுமே பலர் அப்படி முயலுவது இமிடேஷன்” ஆகிவிடுகிற அபாயம் இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக ஒரு சொற்பொழிவாளன் என்ற முறையில் கேட்பவர்களையும், பேசுபவர்களையும் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். பள்ளிக்கூட இலக்கிய மன்றங்களிலும், கல்லூரிகளிலும் இளம் தலைமுறையினரில் உருவாகும் பேச்சாளர்கள், நடிகர்கள், கலைஞர்களைக் கவனிக்கும் போது ஒரு விஷயம் என் மனத்தை அதிகம் பாதித்துக் கவலையளித்திருக்கிறது. பல சமயங்களில், சொற் பொழிவு கேட்டுக் கொண்டிருக்கிருேமா அல்லது ஏதாவது 'மிமிக்ரி' நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிருேமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டதுண்டு.

அத்தனை பேரும் வீர பாண்டியக் கட்டப்பொம்மனில் சிவாஜி வீர முழக்கமிட்ட அதே குரலில், அதே பாணியில் பேசினர்கள். அல்லது ஏதாவதோர் பிரபல அரசியல் தலைவரின் பழைய, பழகிய ஒரே பாணியில் பேசினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/158&oldid=562400" இலிருந்து மீள்விக்கப்பட்டது