பக்கம்:சிந்தனை வளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 157

ஒருவர் தல்ை முடி வைத்திருப்பது போல் மற்ருெருவர் வைத்துக் கொள்வது, ஒரு பெண் கொண்டை போட்டுக் கொள்வது போல் மற்ருெருவர் போட்டுக் கொள்வது அ ஒருத்தி உடுப்பது போல் மற்ருெருத்தியும் புடைவை உடுத் திக்கொள்வது இவற்றையாவது ஃபேஷன்ஸ் என்று ஒதுக்கி விடலாம். பழக்க வழக்கம், உண்பன, உடுப்பன ஆகிய வற்றிலுள்ள ஒருவிதமான தன்மைகளை நியாயப்படுத்த முடியும். ஏற்கவும், ஒப்புக் கொள்ளவும்கூட முடியும்.

அறிவுத் துறையிலும், கலைத் துறையிலும் ஒரே விதமான சிந்தனை, ஒரே விதமான பாணி ஒரே விதமான அணுகு முறை, ஒரே விதமான கற்பனை என்பது மூளை வறட்சியைக் காட்டும் அடையாளங்களில் ஒன்ருகி விடும். வெகு சிலரைத் தவிர பெரும்பாலோரைப் பொறுத்தவரையில் நம்மிடையே எழுத்திலும், பேச்சிலும் நடிப்பு முதலிய கலைகளிலும் ,இமிடேஷன்” பார்த்தீனியமாகக் களை மண்டி விட்டது.

மிக மிக உயர்தரமான கலை என்பது இமிடேட் செய்கிற வனை ஏமாற்ற வேண்டும். இமிடேட் செய்கிறவனுடைய கொச்சையான கைகளுக்கு எட்டாத உயரத்திற்கு மேற் பட்டு நிற்க வேண்டும் அது. ஆனால், இந்தக் கலைஞர்களின் எண்ணிக்கை நம்மிடையே குறைவு.

மகாகவி பாரதியாரைப் போல், உத்வேகமும் உணர்ச்சி அழகும் நிறைந்த கவிதையை இன்னொருவர் பாட முடிய வில்லையே என்பதுதான் பாரதியாருக்குச் சிறப்பே ஒழிய, பாரதியாரை ஆயிரம் பேர் இமிடேட் செய்துவிட முடியும் என்பது சிறப்பு ஆகாது.

காப்பி, ஈயடிச்சான் காப்பி, இமிடேஷன், இன்னரது ஸ்கூல் ஆஃப்தாட், இன்னரது பாணி, இன்னரது பந்தா, பரம்பரை என்றெல்லாம் பெயர்கள் வழங்கி வருவதைக் கவனியுங்கள். -

முன்பே பலர் நடந்து பழக்கப் படுத்திப் பாதையாக்கிய தடத்தில் தான் நம்மவர்களுக்கு நடந்து வழக்கமே ஒழிய , புதிதாக நடந்து புதுப்புதுப் பாதைகளை உண்டாக்கி வழக்கமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/159&oldid=562401" இலிருந்து மீள்விக்கப்பட்டது