பக்கம்:சிந்தனை வளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் - 157

சில மரணங்களே’க் கூட மிகைப்படுத்திப் பிழைக்கப் :பார்க்கும் சுமார்ரக அரசியல்வாதிகள் நிறைந்த நாட்டில் "பக்குவத்தை’ எங்கே எதிர்பார்க்க முடியும்? -

கதையோ, படமோ, செய்தியோ, பிரசங்கமோ சிகன்வின்ஸிங்" ஆக இல்லாத பட்சத்தில் மக்கள் அவற்றை ஒதுக்குகிற பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆயிரம் வருடம் கங்கை நீரில் மூழ்கிக் கிடந்தாலும் கரையாத கருங்கல்லேப் போல், அறிவு வளர்ச்சி என்ற கங்கைப் பிரவாகத்தில் காரண-காரியத் தெளிவு என்ற நெகிழ்ச்சி ஏற்படாத கல்வியால் என்னதான் பயன்?

"ஸ்திதப் பிரக்ஞன்” (உறுதியான அறிவு நிலை உள்ளவன்). என்ற ஆன்மீகப் பதம் இதைத்தான் சொல்கிறது. 99 சதவிகித அரசியல்வாதிகள் பதவிப் பிரக்ஞர்’களாக இருக் கிற தேசத்திலே உடனடியாக அந்தப் பக்குவம் வர வழியே இல்லை. - - - - - கற்பனைகளைக் கவிஞர்களுக்கு மட்டுமே ஒதுக்கி விட்டுப் பொது மக்கள் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு அமிகைப்படுத்தலில் இருந்து விடுதலை அடையவேண்டும். மிகைப்படுத்தல்’ என்பது ஆகாயப் பந்தலில் இருப்பதைப் போன்றது. ஆகாயப்பந்தலில் மனிதர்கள் வசிக்கவும் முடியாது. வசிக்கவும் கூடாது. . . * 女

في 1 سس , F#:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/199&oldid=562441" இலிருந்து மீள்விக்கப்பட்டது