பக்கம்:சிந்தனை வளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - சிந்தனை வளம்

சாதாரணமான ஒரு விஷயத்தைத் தான் கேட்டபடி சாதாரணமாக மெருகு கொடுத்து எழுதவோ, சொல்லவோ இங்கே யாரும் தயாராக இல்லை. -

ஒவ்வொரு விஷயமும் பேச்சிலோ, எழுத்திலோ மிகைப் படுத்தப்பட்டே மக்களுக்குப் போய்ச் சேருகிறது. ஏராள. மான கவிஞர்களும் புலவர்களும் பல்லாயிரம் ஆண்டு களாகவே வாழ்ந்து பழகிய தேசமாக இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொரு குடிமகனிடமும் கற்பனை உணர்வும் மிகைப்படுத்தும் குணமும் பிரமாதமாக நிரம்பி இருக் கின்றன. -

கடல் பாசியில் அல்வா செய்து பசியைப் போக்கு வோம்’ என்பது ஒரு தேர்தல் வாச்குறுதி. அனைத்து மக்களுக்கும் தாலிக்குத் தங்கம்’ என்பது ஒரு தேர்தல் வாக்குறுதி. இப்படியே போனல், எந்தப் பெண்ணும் கற்பை இழக்காமல் காப்போம்!” என்று கூட ஒரு வாக்குறுதி வரும். மிகைப்படுத்தல்' என்ற செப்பிடு வித்தையை வசப் படுத்தி நன்ருகப் பேசிப் பழகிக்கொண்டு விட்டால் அது ஆளும் கட்சிக்கும் பயன்படும், எதிர்க்கட்சிக்கும் பயன்படும். "ஒரு விஷயம் அதிகமாக மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவே ஐந்து வருஷமாகிற தேசம் இது.

"ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, என்ற மிகைபடக் கூறல் நமக்குப் புரிவதற்கே, ஒரு படி அரிசி மூன்று ரூபாய் விலைக்கு விற்கிற காலம் வரை தாமதம் ஆகி விட்டது.

மக்களின் நிறுவைத் தராசு மட்டும் சரியாக இருக்கு மாளுல், எந்த அரசியல் கட்சியும் மிகைபடக் கூறலால் அவர்களை ஏமாற்றவே முடியாது. -

ஆனால், இங்கு மக்களுக்கே யதார்த்தத்தில் அதிகமான ஈடுபாடு இல்லை. ஒன்று, எதையாவது மிகைப்படுத்தி அவ்லது குறைப்படுத்திக் கூறி வர்ணிப்பதைச் செவிமடுக்கும் அளவுக் குத்தான் அவர்களும் இருக்கிருர்கள். பிரிட்டனப் போல், பக்குவமான மக்கள் உள்ள நாடாக ஒன்று இருந்தால்

மிகைப்படுத்தல் அங்கே செல்லுபடியாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/198&oldid=562440" இலிருந்து மீள்விக்கப்பட்டது