பக்கம்:சிந்தனை வளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 r சிந்தனை வளம்

ஒரு செயல்படும் வேகம் தெரியும், உதாரணம், இருபது அம்சத் திட்டமும் ஐந்து அம்சத் திட்டமும்.

சுமாரான மக்கள் அன்பிற்குக் கட்டுப்படுவதைவிட அதிகாரத்திற்குக் கட்டுப்படுவார்கள். சர்வாதிகாரத்திற்கு, இன்னும் பயந்து கட்டுப்படுவார்கள்.

சுதந்திரத்துக்கு-சுதந்திரத்தை அனுபவிப்பதற்குஜனநாயகத்திற்கு -ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கு -மக்களைத் தயாரித்துப் பக்குவப் படுத்த வேண்டும். இல்லா விட்டால் கஷ்டம். -

ஆனல். சர்வாதிகாரத்திற்கு - அடக்குமுறைக்கு - அப்படி மக்களைத் தயாரிக்கவோ, பக்குவப்படுத்தவோ வேண்டியதில்லை. பிசைந்த களிமண்ணே வைத்துப் பிள்ளை யாரும் பிடிக்கலாம், குரங்கும் பிடிக்கலாம். சர்வாதிகாரத். தின் கைகளில் மக்கள் களி மண்ணுகப் பிசைபடுவார்கள். மக்களே சில குழப்பமான சமயங்களில் தாங்கள் என்ன பேசுகிருேம் என்பது புரியாமல், நம்ம நாட்டுக்கு. சுதந்திரம், ஜனநாயகம் இதெல்லாம் லாயக்கில்ல்ை சார்! "டிக்டேடர்ஷிப்” தான் வேண்டும். அப்பத்தான் உருப்படும்’ என்று அடிக்கடி பேசுவதைக் கேட்கலாம். இப்படி எது லாயக்கு, எது வேண்டும், எது வேண்டாம் என்றெல்லாம். பேசுகிற உரிமை கூட ஜனநாயகத்தில்தான் இருக்கும். சர்வாதிகாரத்தில் அந்த உரிமை கூட இராது.

சர்வாதிகாரத்தில், எது வேண்டும் எது வேண்டாம். என்றெல்லாம் மக்களைப் பேச விடவோ, முடிவு எடுக்க: விடவோ மாட்டார்கள். - -

சுதந்திரத்துக்குள்ளேயே சில சர்வாதிகாரங்கள் உண்டு. ஒரு சிலருக்காகப் பலர் சிரமப்படுகிற நிர்ப்பந்தங்கள் எல்லாம் அதில் சேரும்.

ஒர் ஊரில் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கவில்லை. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் தங்கள் ஊரில் நிற்க வேண்டும் என்பதற்காகப் பலங்கொண்ட மக்கள் ஒன்று திரண்டு. அந்தப் பாதையில் வருகிற மற்ற ரயில்களைக் கல்லாலடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/202&oldid=562444" இலிருந்து மீள்விக்கப்பட்டது