பக்கம்:சிந்தனை வளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 20 #

கிருர்கள். தண்டவாளத்தில் பாருங்கல்லைப் புரட்டி வைக். கிரு.ர்கள். இதனுல் ரயில்களில் வருகிற பொதுமக்கள், குழந்தை குட்டிகளுக்குக் காயம், சேதம் எல்லாம் ஏற்படுக கிறது. ரயில்வே நிர்வாகத்தோடு ஒரு கிராமத்துக்கு உள்ள மனத்தாங்கலை, பிரயாணம் செய்கிற மற்றப் பொது, மக்களைத் துன்புறுத்துவதால் எப்படித் தீர்த்துக் கொண்டு விட முடியும்? இது வெகுஜன சர்வாதிகார வகையைச் சேரும். -

தனக்குப் பயன்படாதது மற்றவர்களுக்கும் பயன்பட க்' கூடாது என்றெண்ணுவது ஒருவகையான சர்வாதிகாரச் சாயல். தனக்கும் பயன்பட முடிந்து மற்றவர்களுக்கும் பயன்படுகிருற் போல இருக்கிற ஒன்றை மற்றவர்களுக்கு மறுப்பது சர்வாதிகாரத்தின் பிறிதொருசாயல், சர்வாதி. காரி என்பவன், எங்கோ ஏழு கடல்களைக் கடந்து அப்பா லிருக்கும் தீவு ஒன்றிலிருந்து உருவாகிவரும் ராட்சஸன் என்று நினைப்பதில் பயனில்லை. மக்களுக்கு நடுவே மக்களைப் போலவே அவர்கள் இருக்கிருர்கள். சந்தர்ப்பம் கிடைத் தால் பெரிய சர்வாதிகாரியாகிருர்கள். சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் சாதாரண சர்வாதிகாரியாகவே: இருந்து விடுகிருர்கள். இதுதான் வித்தியாசம். சாதாரண சர்வாதிகாரிகளுக்குக் கொடுமைக்காரர்கள் என்று மட்டும். பெயர் கொடுத்து விட்டு விடுகிருேம். புகழ்பெற்ற, நாடு ழுமுவதும் கொடுமைப்படுத்துகிற பெரிய கொடுமைக் காரர்களுக்குச் சர்வாதிகாரிகள் என்று பெயர் கொடுக் கிருேம், அல்லது கெளரவப்படுத்துகிருேம்.

சில பாமர மக்கள் தாங்கள் கொண்டாடுவதன் மூலமும் அளவற்றுப் புகழ்வதன் மூலமுமே, சுமாரான சர்வாதிகாரி' களே முதல்தரமான சர்வாதிகாரிகளாக மாற்றி விடுகிருர் கள். .

நாடுகளை ஆள்பவர்களிலும், ராணுவக் கேந்திரங்களிலும் ராஜியவிவகாரங்களிலும்தான் சர்வாதிகாரிகள் உருவாக முடியும். என்று நினைத்துக் கொண்டிருக்கிருேம். வீடுகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/203&oldid=562445" இலிருந்து மீள்விக்கப்பட்டது