பக்கம்:சிந்தனை வளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"302 சிந்தனை வள்ம்

அலுவலகங்களில், அரசியல் கட்சித் தலைமைகளில், கல்வி நிலையங்களில், குடியிருப்புப் பகுதிகளில், சிறிய ஊர்களின் தெருக்களில், எங்கே வேண்டுமானலும் எப்படிவேண்டு மாலுைம் சர்வாதிகாரிகள் உருவாகி விடுவார்கள். உருவாகி யிருக்கிரு.ர்கள்.

எங்கெங்கெல்லாம், நி ர் ப் ப ந் த ம் இருக்கிறதோ எங்கெங்கெல்லாம் அபிப்பிராயங்கள் மக்கள் மேல் திணிக்கப்படுகின்றதோ, எங்கெங்கெல்லாம் மக்களின் சுயசிந்தனே அடக்கி ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகார நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கு கின்றன. 'ஜீவகாருண்ய விலாஸ் கசாப்புக் கடை என்று மட்டன் ஷாப்புக்குப் பெயர் வைப்பது போல் சில சர்வாதி காரங்களுக்கு ஜனநாயக ரீதியில் பெயர் கொடுக்கப்பட்டிருக் கலாம். அந்தப் பெயருக்கு எந்த அர்த்தமும் இருக்காது. நிதானமான ஒரு பெயரின் கீழ் மிகவும் தீவிரமான கொடு மைகள் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான்."

மிகவும் குருட்டுத்தனமாக ஒன்றைப் பின்பற்றும் இயல்பும், கண்மூடித்தனமான வீர வணக்க மனப்பான்மை யும் எந்த மக்களிடம் நிரம்பியிருக்கிறதோ அங்கே சர்வாதி காரிகள் தாராளமாக உருவாக முடியும். வளர்ந்து செழிக்க வும் முடியும். . . . .

பொதுமக்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு, குனிந்து குனிந்து கும்பிட்டுக் கொண்டேயிருந்தால் கழுதைக் குக் கூட அவர்களை ஆசீர்வதிக்கும் சக்தி வந்துவிடும். ஒவ்வொரு தலைமுறையிலும் மக்கள் தங்களை ஆசீர்வதிக்கும் நபர்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிருர்கள், பின்பு உருவாக்கியவர்களின் கவனக்குறைவினல், ஆசீர்வதிப்பவர் களே தலையில் கையை வைப்பவர்களாகவும் மக்களை மொட்டையடிக்கிறவர்களாகவும் மாறி விடுவது உண்டு.

பொறுமையின்மை, தாழ்வு மனப்பான்மை, அதிகாரங் களைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் பேராசை ஆகியவற்ருல் ஒருவர் படிப்படியாகச் சர்வாதிகாரியாக முடியும். ஒருமுறை மனித ரத்தத்தைச் சுவைத்த புலி எப்படி மேன் ஈட்டர்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/204&oldid=562446" இலிருந்து மீள்விக்கப்பட்டது