பக்கம்:சிந்தனை வளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6 6 நா. பார்த்தசாரதி

வர்கள், தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், எல்லோரும்தான் தேசத் துரோகிகள்.

ஆளுல் இன்ருே தேச முன்னேற்றத்துக்கு உழைக்காததேச முன்னேற்றத்துக்கு எதிராக உழைக்கிற-அனைவரும் தேசத் துரோகிகளே. சுதந்திரத்துக்குப் போராடுகிற நாட் டில் இருந்தவர்களேவிட அதிகமான தேச பக்தர்கள் சுதந் திரம் அடைந்த நாட்டில்தான் இருக்கவேண்டும். எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்தவனுக்கு அணு ஆவன்ன அல்லது .ஏ, பி, சி, டி, தெரிந்திருக்க வேண்டும் என்பது எப்படிச் சொல்லாமலே விளங்குமோ, அப்படியே ஒரு தேசத்தின் விசுவாசமுள்ள குடிமகன் தேசபக்தனுகவும் இருக்கவேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், நம் நாட்டு வழக்கப்படி சாதாரணமாக ஒருவருக்கு இருக்க கவண்டிய குணங்களையே கிறப்பியல்புகளாக உயர்த்திப் பேசுவது உண்டல்லவா? அதுபோல் தேசபக்தியும் பேசப்படுகிறது. ‘இவர் தாய்மொழியில் பற்றுள்ளவர்-என்று ஒருவ ரைப்பற்றிச் சொல்வது உண்டல்லவா? தேச பக்தியைப் பற்றியும் அப்படிற்தான் சிறப்பித்துச் சொல்லிக்கொண் டிருக்கிருேம். தாய் மொழியில் பற்றில்லாதவராக இருப் பதே இயல்புக்கு மாறனது என்ற உணர்வு ஏற்படுவதற்குப் பதில், தாய்மொழி தெரிந்து அதில் பற்றுள்ளவராகவும் இருப்பது பெரிய காரியம் என்பதாகச் சொல்லிப் பெருமைப் படுத்தியும், பெருமைப்பட்டுக் கொண்டும் இகுப்பது போல் தான் தேசபக்தி விவகாரமும் சில சமயங்களில் பெரிது படுத் தப்படுகிறது. -

சாதாரணமாக இருந்தாக வேண்டிய நல்ல குணங் . களையே விசேஷமான குணங்களைப்போல் மேடையில் சும்மா வானளாவப் புகழ்ந்து பேசிப் பழகிவிட்ட நம் நாட்டில்,

மிகப் பல விஷயங்கள் இப்படித்தான் உள்ளன.

"இவர் ஆங்கிலேயர்-இவருக்கு இங்கிலீஷில் நல்ல பற்று உண்டு-என்று லண்டனில் ஒருவரை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்த மாட்டார்கள். சிரிப்புக்கிடமாகிவிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/68&oldid=562310" இலிருந்து மீள்விக்கப்பட்டது