பக்கம்:சிந்தனை வளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நா. பார்த்தசாரதி

ஏளுேதானே மனப்பான்மையும் இப்போது சில கிராமங்கள் வரையில்கூடப் போய் அவற்றையும் கெடுத்தாலும் கெடுத் திருக்கலாம்.

ஓர் ஒப்புநோக்குக்காக இனிமேல், இங்கே என் சென்னை நகர அனுபவங்களைச் சொல்கிறேன். இரண்டையும் படித்துவிட்டுச் சிந்திப்பீர்களாயின் ஏனுேதானே மனப் மான்மை பற்றிய காண்ட்ராஸ்ட்' உங்களுக்குப் புரியும்.

ஒருநாள் கடற்கரையில் நாகுக்காக உடையணிந்த நாலைந்து இளம்பெண்களுடன் இரண்டு மூன்று வாட்ட சாட்டமான அரும்பு மீசை இளைஞர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தோற்றத்தி விருந்தும், பேசிக்கொண்டிருந்த தோரணையிலிருந்தும் வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய முடிந்தது.

அப்போது அவர்களுக்கு வெகு அருகில் வந்து உட்கார்ந்த ரெளடிகளின் தோற்றமுடைய இரண்டு துண்டு பீடி ஆட்கள், பெண்கள் கேட்கக் கூசும் செங்காங்கடை பாஷையில் விடாமல் இரைந்து பேசினர்கள். பேசவேண்டும் என்பதற்காக இல்லாமல், அருகே அமர்ந்து இங்கிதமான குரலில் தங்களுக்குள் மெதுவாகவும், நாகரிகமாகவும் பேசிக் கொண்டிருக்கும் மற்றவர்களை வலுவில் சண்டைக்கு இழுக்க வேண்டும் என்றே அந்தத் துண்டு பீடி ஆட்கள் முயல்வதாகத் தெரிந்தது.

அரும்பு மீசை, டி ஷர்ட் இளைஞர்களையும், யுவதிகளை யும் இது பாதித்தாலும், கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந் தார்கள். ஓர் அரும்பு மீசை இளைஞர், தான் ஜூடோ, கராத்தே படிப்பது பற்றிப் பெண்களுக்கு அவர்கள் நகைத்து மகிழும் விதத்தில் விளக்கிக் கொண்டிருந்தார். துண்டு பீடி ஆட்கள் எல்லை மீறி ஆபாசமாகப் பேசத் தொடங்கிய பின்பும், அரும்பு மீசை இளைஞர்கள் அலட்டிக் கொள்ள வில்லை. பாதிக்கப்படவில்லை.

ஆல்ை, நான் பொறுமை இழந்தேன். அந்தத் துண்டு பீடி ஆட்களை நோக்கி, 'இது பீச்! பொது இடம். மத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/78&oldid=562320" இலிருந்து மீள்விக்கப்பட்டது