பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 : சிந்தாநதி இங்கே நான் என்ன வேலை செய்தேன்னு யாரும் கேட்கமாட்டேங்கறாளே! சரி, நானே சொல்றேன். காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு, பட்டறைக்கு வந்துவிடுவேன். சுவரில் எல்லோரையும்போல் ஆணியில் சொக்காயை மாட்டிவிட்டுச் சக்கரம் வெட்டுவேன். அதாவது, ஒரு மெல்லிசுப் பலகையில் ஒரு வட்டம் பென்சிலால் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தக் கோட்டு மேலேயே விளம்பின மாதிரி உளியால் செதுக் கிக் கொண்டே போகணும். வெட்டிக் கொண்டிருக்கையி லேயே விண்டுபோகும். போவட்டும், இன்னொண்ணு வெட்டு. உளி பிடித்து, அதன்மேல் கொட்டாப்புளியால் தட்டு வதில் கண்டிப்பாகத் தனிக் குஷிதான். டொக் டொக், லொட் லொட்- இதுதான் என் வேலை. அனேகமாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்கிற மாதிரிதான். இது தச்சன் பட்டறை. ஆனால் பலன் என்னவோ ஒண்ணுதான். அபூர்வமாக, ஒன்று பூரா வட்டம் கண்டுவிட்டால் என்னைக் கட்டிப் பிடிக்க முடியாது. 'மூஞ்சியிலே செழுப்பு எப்படி ஏறுது பார்த்தியா?) அன்னிக்குக் கனாவுலே நான் வெட்டின சக்கரம், மாட்டு வண்டி சக்கரம் பெரிசுக்கு. அதன் சிரங்குப் பொருக்கு விளிம்புடன் வந்து கிறுகிறுன்னு சுற்றும். நான் வெட்டின சக்கரம். விஷ்ணு சக்கரம். ஒரு நாள். காலை. அப்போதுதான் பட்டறையில் கூடியிருக் இாே, றோம.