பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 123 இத்தனை நாழிக்கு இட்லிக்கடை நடந்துகொண்டிருக் கும். சட்டினி, சாம்பார், சர்க்கரையுடன் குழந்தைகள் கண்டபடி வாரியிறைத்துக் கொண்டு. இருக்கிற ஒன்று அரை அரிசியைத் திரட்டிப் பொங்கி, நீராகாரத்தைக் கலக்கி- அது ஆண்களுக்கு ஆச்சு. பெண்கள் ? பாட்டி அவரிடம் இரு கைகளிலும் பயபக்தியுடன் ஏந்திக் கொணர்ந்த தம்ளரை அப்படியே தட்டி வீசி அடித்தார். பட்டறையில்தான் என்ன வேலை நடக்கும்? பேசவே அஞ்சினோம். மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் போய்த் திரும்பி வந்தபோது, அவர் விமானத்துக்கெதிரே, கண்ணை மூடிய வண்ணம், நிமிர்ந்த முதுகுடன் அசைவற்று உட்கார்ந்திருந்தார். மனி ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு- அப்படியே துரங்கிப்போயிட்டாரா? துரங்க முடியுமோ? ஐந்தரை, ஆறு மணி வாக்கில், கலைந்தார். ஏதோ முடிவுக்கு வந்தாற் போல் முகத்தில் ஒரு தெளிவு. பிள்ளைகளை விளித்தார். எதிரே வந்து நின்றனர். "துட்டை நீங்க எடுக்கல்லே இல்லியா?” மூவரும் சேர்ந்தாற்போல் தலையை ஆட்டினர். "சரி, பெருமாளுக்குக் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்து அணையுங்க." மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் முகம் ஒரே மாதிரியாக வெளிறி விட்டது.