பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 & சிந்தாநதி 'இல்லை, வெளிச்சமாகத் தெரியல்லே. ஆனால் நீங்கள் சரியாயில்லை. என்ன உடம்பு!” மழுப்பினார். "இந்தக் கலியான சாக்கில், இட மாற்றமாயிருக்கலாம்னு வந்தேன். மூணு நாள்தான் லீவு. வேலையையும் பொறுப்பையும் நினைச்சுப் பார்த்தாலே, இப்பவே மறு வண்டிக்குத் திரும்பிடலாமான்னு இருக்கு." - "ஓ, அதுதான் உங்களுக்கு உடம்பு.” மறுபடியும் கண்களில் அந்த ஏதோ பயம். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் தோள்மேல் கைபோட்டுக் கொண்டார். "உன் பையனைக் கூட்டிக்கொண்டு பட்ட ணத்தைச் சுற்றிப் பார்க்கலாம்னு இருக்கேன்.” 'முதலில் அவன் பட்டனத்தில் என்னத்தைக் கண்டான்? ஆனால் உங்களுக்குத் துணை வரட்டுமே! அதைவிட அவன் வெட்டி முறிக்கறது என்ன?” அந்த மூன்று நாட்களும் அவருடன் சுற்றி, பட்டணம் பார்த்தது நான்தான். பெங்களுரிலிருந்து வந்த புதிதில், குழந்தைப் பிராயத்தில், செலவில்லாத இடங்களுக்குப் பெரியவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த வருடம் S.S.I.C. தேறி, நான் பெரிய பையன்; almost இளைஞன். என் மறு விழிப்பில் இருந்தேன். உயிரோ, ஜடமோ எனை மதித்து என் பார்வைக்கு எதிர்ப் பார்வை தந்தன. மிருகக் காட்சி சாலையில், "பையா, சித்தே உள்ளே வரமாட்டியா?” என்று சிங்கம் பார்வையில் என்னை அழைத்தது. "பார் இந்தப் பாவிகளை, என்னை இப்படிக் கூண்டில் அடைத்துப் போட்டிருக்கான்கள்!”