பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 & சிந்தாநதி கொண்டேன். மணியடித்து பியூனை வரவழைத்து அவரை அழைத்து வரக் கட்டளையிட்டேன். “பிள்ளைவாள், இது டாங்க். சினிமா கொட்டகை

  1. y

அல்ல. "தெரியும் சாமி. உங்கள் பேரேடில் என் கணக்கு இல்லாவிட்டால் நீங்க பால் பாயசம் சாப்பிட்டிருக்க முடியாதுன்னும் தெரியும்.” ஐயையோ! பாயசத்தில் பங்கு கேட்கிறாரா? "நான் ஒரு பெரிய மில் முதலாளி. என்னை இப்படி அவமானப்படுத்திட்டீங்களே, அதுக்கு என்ன ஜவாப் சொல்றீங்க?" ஒஹோ! தண்டவாளம் அப்படி ஒடுகிறதா? எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. ஒரு பக்கம் விழி நரம்புகள் குறுகுறுத்தன. “உங்கள் கேள்விக்கு நான் ஒரே சமயத்தில் நாலு பதில்கள் சொல்ல முடியும். ஆனால் சொல்லப் போவ தில்லை. நான் Branch manager மட்டுமல்ல, என் ஸ்தா பனத்தில் ப்ரதிநிதி." இது சமயம் ஒன்று. யதார்த்தம் என்று சொல்கிறேமே, ஆனால் அதிலும் முழுமை கிடையாது. எப்படியோ Melodrana, நாடக பாணி புகுந்துவிடுகிறது. “State Bank என்னைத் தாம்பூலம் வெச்சு அழைக்க றாங்க. நான்தான் பழைய நினைப்புக்குப் பார்க்கறேன்.” “பிள்ளைவாள், தாராளமாகப் போங்க. அவங்க தாம்பூலம் வெச்சால், நான் மேளம் வெக்கறேன். உங்கள் கணக்கில் பூரா பாக்கிக்கு அவங்க செக் அனுப்பிச்சாலும் சரி, நீங்கள் ரொக்கம் கட்டினாலும் சரி- கிடங்கில்