பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 171 ஆனால் பெரும் தொகைகளுக்குப் புனாவிலிருந்து, கான்பூரிலிருந்து செக்குகள் வந்தால்- கணக்கில் இட மில்லாது, இந்த வெளியூர் மாப்பிள்ளைகளைச் சமாளிப்பதெப்படி? பிள்ளைவாளுக்குப் புத்திமதியாகச் சொல்லிப் பார்த்தேன். அவர் விடும் காற்றாடிகளுக்கு பாங்க் வாசல் கட்ட இயலாது, நூலுக்கு மாஞ்சா தடவ முடியாதென்று. 'இந்தத் தடவை மட்டும் என்று சிரித்தபடி கும்பிடு போடுவாரே அன்றி திருந்துவதாக இல்லை. அப்புறம் நான் என் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப் பதற்கு அர்த்தமென்ன? எப்பவுமே, வியாபாரம் பெருகப் பெருக, முதலீடும், கடனாக வாங்கிய பனங்களும், சரக்கு, மெஷினரி, வெளியிலிருந்து வசூலாக வேண்டிய பாக்கிகள் இத்யாதி எனப் பல உருவங்களில், விதங்களில் முடக்கிவிட, ரொக்கத்துக்கு வியாபாரத்தின் பசி, பகாசூரப் பசிதான். வியாபாரி மார்க்கெட்டை முடக்குவதற்கு பாங்க் உதவி செய்யாது, செய்யக் கூடாது. p5@ill 1356ix, Banking Hall Zéo கூட்டம் மும்முரம். திடீரென ஒரு உர்த்தண்டமான குரல். நான் என் அறையிலிருந்து வெளி வந்தேன். பிள்ளைவாள் கண்களில் பொறி பறக்க என்னிடம் வந்தார். பிள்ளையாருக்குக் கோபமா? புராணத்தில் அப்படிப் படித்த நினைப்பில்லையே! தொந்தி கணபதி ஜாலிப் பேர்வழியாச்சே! "யார் இந்த போலோசந்த் ப்ரசன்ன சந்த் செக்கைத் திருப்பினது?” எல்லோரும் எங்களைத் திரும்பிப் பார்த் தனர். நான் உள்ளே திரும்பி என் நாற்காலியில் அமர்ந்து