பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - சிந்தாநதி எலெக்ட்ரிக் ட்ரெயினில் அடிப்பட்டு, ஆள் சாகா மலோ அல்லது முழுமையாக மிஞ்சினதாகவோ இது வரை யாரேனும், படித்தோ, கேட்டோ இருக்கேளோ? அது வந்து மோதற வேகத்திலேயே, அவன் தினம் மத்தியானம். காரனேஷன் தர்பாரிலிருந்து வரவழைக்கிற பிரியாணிக்குத் தொடுக்கற சட்டினியாக அவனே ஆகியிருக்க மாட்டானா ? 'மரிச்சது நீரோ, நீவிர் அண்ணனோ, கதையாயில்லே?" இதைக் கேட்டதும் என் மனதில் சொல்ல எழுந்த ஒன்றை இழுத்து உள்ளே அடக்கிக் கொண்டேன். குதர்க்க மாக என்ன சொல்வாள் தெரியுமா? "ஏன் அவனும் உங்கள் சிம்னி மாதிரி ஆகவில்லை என்கறேளா?” நீச்சல் தெரியாமல் சிந்தா நதி நடுவில்,