பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 துரோகம் -ஏனோ அறியேன் இன்று மனம் ஏதோ பச்சாதாப நிலையில் பரிதவிக்கிறது. காரணம், காரியம் இதற்கெல் லாம் ஆய்ந்தாலும் தெளிவாகக் கிடைக்கப் போவ தில்லை. செயல் ஒடுக்கம் காணக் காணப் பிறகு சிந்தனை தான் தூக்கல். அதுவும் பழங் கணக்கில் புழுக்கம். குற்றங்களை ஒப்புக்கொள்வதில் இப்போது ஒரு இன்பம் உணர்கிறேன். பையல் பருவத்தில், வாலிபத்தில் தடுத்த பயம், அல்லது அகந்தை, தாழ்வு மனப்பான்மை, அப்போது குளிருக்காக உடலைச் சுற்றிக்கொண்ட அங்கியாயிருந்தவை இப்போது புழுக்கத்தில் தாமாகவே கழன்று விழ. விளைவாய மனத்தின் லேசு, அனுபவிக்கத் தான் தெரியும். குற்றம் என்றவுடனேயே இதோ ஒரு கதை வருகிற தென எழுந்து நிமிர்ந்து உட்காருவோருக்கு விசனத்துடன் கை விரிக்கிறேன். கொலை, கனவு, கொள்ளையெனத் திடுக்கிடும் சாஹலங்களுக்கு எங்கு போவேன்? அப்படிச் சட்ட விரோதமாகச் செய்திருந்தால் ஒப்புக்கொள்ளப் போகிறாயா எனும் ஏளனத்துக்கும் என் செய்வேன்? சிந்தா நதியில் பிராயசித்த ஸ்நானத்துக்கு இறங்கு கையில் படித்துறை வழுக்குமே என்று யார் கையை நான் பிடித்தாக வேண்டும்?